அற்புத பின்னணியுடன் வரையப்பட்ட நிர்வாண பெண் ஓவியங்கள். யூ டியூப் இணையதளத்தில் சாதனை.

art-nacked1ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண் ஓவியர் நிர்வாண பெண்களின் உடல்களில் பலவித அற்புதமான ஓவியங்களை அதிசயத்தக்க பின்னணியுடன் வரைந்து, அதன் பின்னர் அவர் வரைந்த ஓவியங்களை யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் வீடியோவை பதிவு செய்த சில நாட்களில் 500 மில்லியன் பார்வையாளர்கள் அந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த Emma Hack என்ற பெண் ஓவியர் வித்தியாசமான முயற்சியாக அதிசயத்தக்க பின்னணியுடன் நிர்வாண பெண்களை நிறுத்தி வைத்து ஓவியம் வரையும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் வரைந்த அந்த ஓவியங்களை சமீபத்தில் வீடியோ எடுத்து அதை யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்தார். அந்த வீடியோ மிகக்குறுகிய காலத்தில் சுமார் 500 மில்லியன் ஹிட்களை தாண்டிவிட்டது.

தற்போது அடுத்ததாக இன்னொரு புதிய முயற்சியாக அவர் வரையும் நிர்வாண் பெண் ஓவியங்கள் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஓவியங்களில் மாடல்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தாலும், ஆபாசம் சிறிதும் இன்றி பின்னணி ஓவியங்களும், பெண்களின் மீது வரைந்த ஓவியங்களும் ஒன்றுக்கொன்று இணைந்து காணப்படுவதால் ஆபாசம் சிறிதும் இன்றி கலைப்பொக்கிஷமாக இந்த ஓவியங்கள் கருதப்படுகின்றன.

இவர் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் லண்டனில் உள்ள Rebecca Hossack Gallery என்ற இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த ஓவியங்களை பார்வையிட வருவதாக கூறப்படுகிறது. தான் வரையும் ஓவியங்களுக்கான ஐடியாக்களை தாம் சுற்றுப்பயணம் செல்லும் இயற்கை காட்சிகளில் இருந்து பெறுவதாக Emma Hack கூறியுள்ளார்.
art-nacked5

art-nacked4

art-nacked3

art-nacked2

Tags: , , ,

Leave a Reply