சர்வதேச போதைப் பொருள் வர்த்கதத்தின் மையமாக இலங்கை.

smoke2சர்வதேச போதைப் பொருள் வர்த்தகத்திற்கான களமாக இலங்கை பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்து பெருமளவிலான போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு இலங்கையிலிருந்து வேறும் நாடுகளுக்கு விநியோகம் செயய்யப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த ஆண்டில் இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவிருந்த 400 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பாகிஸ்தான் அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாகிஸ்தான் போதைப் பொருட்களை உற்பத்தி செய்வதில்லை என அந்நாட்டுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது, பாகிஸ்தான் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளின் களமாக பயன்படுத்திக் கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது,

Tags: , ,

Leave a Reply