குடித்துவிட்டு காதலியுடன் அட்டகாசம் செய்த இளவரசர் ஹாரி.

drink_harry_002இளவரசர் ஹாரி, தனது பணப்பை மற்றும் கைப்பேசி என அனைத்து பொருள்களையும் தொலைத்து விட்டு குடி போதையில் அட்டகாசம் செய்துள்ளார். இளவரசர் ஹாரி தனது நண்பரின் திருமணத்திற்காக ஸ்லோவாக்கியா சென்றுள்ளார்.

அங்கு அவர் தங்கியிருந்த ஹொட்டலின் மது அருந்தகத்தில் வொட்கா, ரம் என பல வகையான மதுபானங்களை குடித்துவிட்டும், தனது உடமைகளையும் தொலைத்துள்ளார். மேலும் இவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்களுடன் சுற்றியதோடு மட்டுமல்லாமல், குடித்துவிட்டு காலை 6 மணி வரை மது அருந்தகத்தில் அட்டகாசம் செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஹாரியின் முந்தைய காதலியான செல்ஸி டேவியும் வந்திருந்தார். இதனை அடுத்து ஹாரி மற்றும் செல்ஸி சுற்றி திரிந்துவிட்டு, நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்துள்ளனர். இதனை பற்றி பிரித்தானியாவின் அரச குடும்ப செய்தி வட்டாரங்கள், இது ஹாரியின் சொந்த விடயங்கள் என கூறி கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது

Tags: , ,

Leave a Reply