பிரிட்டன் மாணவர் ஒருவர் பிரான்சில் உள்ள கல்லறை ஒன்றில் தனது மொபைல் போனில் புகைப்படம் எடுத்தபோது அந்த புகைப்படத்தில் பல வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட ஒருவரின் உருவம் இருந்ததால் அந்த மாணவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள ஒரு பள்ளி, பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா சென்றது. பிரான்ஸில் ஜெர்மனியுடன் நடந்த போரின்போது கொல்லப்பட்ட வீரர்கள் அடங்கிய கல்லறையை பார்க்க மாணவர்கள் அனைவரும் நேற்று சென்றனர். இந்த கல்லறை பிரான்ஸ் நாட்டில் Arras என்ற பகுதியில் உள்ளது. இந்த கல்லறையின் பெயர் Neuville-St Vaast war cemetery என்பதாகும். பல மாணவர்கள் அந்த கல்லறையில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். Mitch Glover என்ற 14 வயது பிரிட்டன் மாணவனும் அவர்களுடன் இணைந்து தனது மொபைல்போனில் பல புகைப்படங்கள் எடுத்தார்.
சுற்றுலா முடிந்து வீட்டிற்கு வந்ததும் தான் எடுத்த புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் எடுத்து பார்த்தபோது, அதில் மூன்று படங்கள் மட்டும் கருப்பு வெள்ளையாக இருந்தது. அதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தில் நிழல் உருவத்தில் ஒருவர் நிற்பது போன்றும் தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் தனது பெற்றோரிடமும், வகுப்பு மாணவர்களிடமும் அந்த புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து காண்பித்தார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மாணவனின் பள்ளி ஆசிரியர் கூறும்போது, அந்த கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப்போரில் கலந்துகொண்ட வீரர் ஒருவரின் பேயாக இது இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
















