இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே தோற்றுப் போன இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையையே கடைபிடிக்க தீர்மானித்து விட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைக்கான பிரேரணையை கொண்டு வந்தது.
இதன் போது இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தியா கலந்துக் கொண்டிருக்கவில்லை.
இது இந்திய தேர்தலுக்கு பின்னர் இலங்கை தொடர்பில் புதிய அணுகுமுறை ஒன்றை கையாளப் போகிறது என்பதை எடுத்துக் காட்டி இருந்தார்.
அதேநேரம் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெற மாட்டார் என்ற நம்பிக்கையில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருந்தது.
ஆனால் நிலைமை இலங்கையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கவில்லை.
இலங்கை தொடர்பில் நரேந்திர மோடி கடுமையான நிலைப்பாடுகளை மேற்கொள்வார் என்று, அவர் இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்தித்த பின்னர் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் ஏற்கனவே தோற்றுப் போன 13ம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கத்தை வலியுறுத்தி, இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளார்.
சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தொடர்பான இந்தியாவின் கொள்கையை மறுபரிசீலனை செய்யும் மோடி, இலங்கை தொடர்பான கொள்கையை மறுபரிசீலனை செய்யாது, கடந்த கால அரசாங்கம் கடைபிடித்த கொள்கையினையே தாமும் கொண்டு செல்ல தீர்மானித்துள்ளார் என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
















