எந்தக் கொம்பனாலும் என்னை கட்சியிலிருந்து நீக்க முடியாது என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். என்னை எவராலும் கட்சியிலிருந்து நீக்க முடியாது. முடிந்தால் என்னை கட்சியிலிருந்து நீக்குமாறு நான் சவால் விடுக்கின்றேன். எனக்குத் தேவையில்லை என்றால் நானே கட்சியை விட்டு விலகிச் செல்வேன்.
மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு களனி அமைப்பாளர் பதவியை வழங்க முடியாது. 1650 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஒருவரை எப்படி தொகுதி அமைப்பாளராக நியமிப்பது. இது பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுவதற்கு நிகரானது. நான் களனி தேர்தல் தொகுதியை விட்டுச் சென்றால் அந்தப் பதவியை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரெஹான்சிறி வராகொடவிற்கு
வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனி கொஹல்வில என்னும் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
















