கொழும்பில் 13 லட்சத்து 65,000 ரூபா பணம் பொலிஸாரினால் கொள்ளை: அதிர்ச்சி தகவல்!

Sri-Lanka-Policeகொழும்பு, வௌ்ளவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம் இருந்து 13 லட்சத்து 65,000 ரூபா பணம் பொலிஸாரிநால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது, கடந்த 21ஆம் திகதி குறித்த நபர் வங்கியில் வைப்பிலிட சென்று கொண்டிருந்தபோது, அந்நபரை மறித்த வௌ்ளவத்தை பொலிஸ் நிலையத்தைச் செர்ந்த கான்ஸ்டபிள் பொலிஸார் இருவர் தாம் இரகசிய பொலிஸார் எனக் கூறி அந்நபரை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் அவரிடமிருந்த 13 லட்சத்து 65,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளனர் என நேற்று மாலை வௌ்ளவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன்படி விசாரணை மேற்கொண்ட பொலிஸார் வௌ்ளவத்தை பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: , ,

Leave a Reply