பிரபல தெலுங்கு நடிகை ஒருவரின் ஃபேஸ்புக்கை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டிய இரண்டு கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Broker 2 என்ற தெலுங்கு படத்தில் நடித்த கவர்ச்சி நடிகை Siri Sri. இவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை ஐதராபாத் கல்லூரி மாணவர்கள் இருவர் ஹேக் செய்து வைத்துக்கொண்டு தாங்கள் நடத்திவரும் சமூக சேவை அமைப்பிற்கு பணம் நன்கொடை கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், தாங்கள் ஹேக் செய்து வைத்திருக்கும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாச படங்களையும் ஆபாச செய்திகளையும் இணைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். அவர்களுடைய மிரட்டலுக்கு பயந்து நடிகை Siri Sri, ரூ.52,000 கொடுத்துள்ளார்.
பின்னர் இரண்டு நாட்கள் கழித்து Siri Sri அவர்களின் தந்தையிடமும் அதே நபர்கள் போன் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். Siri Sri தந்தை மகளிடம் இதுகுறித்து விபரங்களை விசாரித்து பின்னர் ஜுப்லி ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீஸார் ஐதராபாத்தில் உள்ள ஒரு மிகவும் பிரபலமான கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவர்கள்தான் இந்த மிரட்டலை விடுத்தவர்கள் என தெரியவந்தது. அவர்கள் இருவரும் ஐதராபாத்தில் உள்ள லாட்ஜில் பிடிபட்டனர். அவர்கள் பயன்படுத்திய லேப்டாப் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களின் பெயர் மற்றும் விபரங்களை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். அவர்களிடம் ரகசிய விசாரணை நடந்து வருகிறது.
















