சிறீலங்காவில் விஜித தேரர் குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது!

vijitha-therarஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

பொய்க் குற்றச்சாட்டை வழங்கிய காரணத்தினால் அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தேரர் இன்று வைத்தியசாலையிலிருந்து விடுதலையானதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply