சமீபகாலமாக தலைப்பு செய்திகளில் அடிக்கடி வரும் நடிகைகளுள் அஞ்சலி முதலிடத்தில் உள்ளார். இயக்குனர் களஞ்சியம் இயக்கும் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் நடிக்க மறுத்ததால் தமிழ் படத்தில் நடிக்க தடை விதிக்கப்படும் என அஞ்சலிக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும் அஞ்சலி களஞ்சியம் திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து வருகிறார். இவருடைய துணிச்சலான முடிவிற்கு இவருக்கு பின்புலமாக இருக்கும் பெரிய மனிதர் ஒருவர்தான் காரணம் என அடிக்கடி செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு அஞ்சலி ஒரு இரவு பார்ட்டியில் மிகவும் கவர்ச்சியான உடையில் போதையில் ஆட்டம் போட்ட புகைப்படங்களில் தொகுப்பு இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரவுப்பார்ட்டியில் தெலுங்கு படத்தயாரிப்பாளர் நல்லமலப்பு புஜி, ஹரிஷங்கர், கோனா வெங்கட் மற்றும் தசரத் ஆகியோர் அஞ்சலியுடன் உள்ளனர். இவர்களுடன் இணைந்து அஞ்சலி போதையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சலி தற்போது ஒரு பிரபலமான அரசியல்வாதியின் பிடியில் இருப்பதாகவும், எப்பொழுதாவது இதுபோன்ற இரவு பார்ட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்போது அதில் கலந்துகொண்டு போதையில் அஞ்சலி நடனமாடுவார் என்று தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.
















