ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
மேற்படி ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணைக்குழுவின் ஆரம்ப கட்ட அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா விசாரணைகளுக்கு அனுமதியளிப்பது குறித்தோ, ஐ.நா விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்தோ இலங்கையின் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை விசாரணைக் குழுவினருக்கான விசா வழங்கப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
















