பிரசன்னவிதானகே VS மீடியா மினிஸ்ரர் சரத் அமுனுகம என்ற பிரதான வழக்கு இலங்கையின் சட்ட மானவர்களுக்கு பாடமாக இருப்பது தெரியுமா?
திரைப்பட இயக்குனர் பிரசன்னா விதானகே நெறிப்படுத்தியுள்ள திரைப்படத்தை நான் இதுவரையில் பார்த்ததில்லை. ஆயினும் அந்த திரைப்படம் திரையிடுவதற்கு முன்னரே பலரும் அதனைப் பற்றி எழுதத் தொடங்கி உள்ளதுடன் அதனைத் தடை செய்யவேண்டும் எனக் கிளர்ந்து எழுந்துள்ளமை பின்னர் அது காட்சிப்படுத்தப் பட்டபோது சில குறுகிய விடயங்களையிட்டு விமர்சிக்கப்பட்டமை போன்ற செய்திகள் -என்னை இந்தக் குறிப்பை எழுத வைத்தது.
இந்தப் படம் காட்டப் பட்டபின்னர் அதன் பாத்திரங்களையும் தமிழ் இனத்தையும் போரின மக்களையும் ஒப்பிட்டு சிலர் வாதங்களை முன்வைத்துள்ளனர். அவற்றை ஒவ்வொன்றாய் இங்கு குறிப்பிட்டு விளக்கமளிக்க நான் இதன் திரைக்கதை ஆசிரியரோ அல்லது கதைக் குழு அங்கதவனோ அல்ல.
பிசன்ன விதானகே போன்ற சிலரால் நல்ல திரைப்படங்களுக்கும் வியாபர மசாலாத் திரைப்படங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை அறியவும் அளவிடமுங் கூடிய ஆறலைப் பெற்ற சிலருள் ஒருவனானேன்.
இந்தப் படக்கதை எழுதப்பட்டதன் பின்னணியை பின்வருமாறு ஒரு திரை விமர்சகர் குறிப்பிட்டிருந்தார்:- பற்றிய
“… பிரசன்னா விதானகேவின் இயக்கத்தில் “பிறகு” (With you without you) என்று மீண்டுமொருமுறை தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் உயிர்பெற்றிருக்கிறது. ராபர் ப்ரெசன், மணி கவுல் இருவரின் திரைப்படத்திலும் இல்லாத ஒரு நெருக்கத்தை இந்த திரைப்படத்தில் உணர முடிந்தது. காரணம், இந்த திரைப்படம், என்னுடைய மொழி பேசும், இனக்குழுவை பற்றிய அரசியலை பிரதானப்படுத்தி இருக்கிறது. மாபெரும் காதல் காவியமாக விரிந்த நாவலுக்குள், அரசியலை நுட்பமாக உட்புகுத்தி, அதனை தன்னுடைய மண்சார்ந்து அடையாளப்படுத்தி இருக்கும் விதானகே எனக்கு இன்னமும் நெருக்கமான படைப்பாளியாக இருக்கிறார்…”
பிரசன்னா விதானகே பற்றி நான் நிறைய எழுத வரவில்லை.
புலம்பெயர் நாடுகளில் அரசியல் பேசுபவர்களுக்கும் அதில் செயற்படுபவர்களுக்கும் தமிழகத்தில் ஈழ அரசியல் பேசும் சிலருக்கும் பிரசன்னாவைத் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான்.
அதனால் அவர் பற்றிய சில குறிப்புக்களை இங்கு எழுத வேண்டி வந்தது.
முதலில் இவர்கள் பிரசன்னா விதானகே இயக்கிய புரகந்த களுவர (Darkness on a Full Moon Day) (1997) (பூரணையின் இருளில்) என்ற திரைப்படத்தை மட்டுமாவது ஒருமுறை பார்ப்பது நல்லது. யூ டியூப்பில் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கமுடியும்.
இத் திரைப்படம் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டு அவர் பல மனக் குழப்பங்களை எதிர் நோக்கியிருந்ததை அவருடன் பழகியவர்கள் அறிவார்கள்.
நாட்டுக்காகப் போராடும் இராணுவத்தினரைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி அதற்குக் தடைவிதிக்குமாறு பிரசன்னா விதானகே மீது வழக்குத் தொடரப்பட்டது.
பல்வேறு மிரட்டல்களையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளார். ஒரு கிராமத்து ஏழைக் குடும்பத்து இராணுவ வீரன் வாழ்க்கையை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டியதற்கான எதிர்ப்பு அது.
இத் திரைப்படத்தை திரையிடுவதற்காக அவர் உயர் நீதிமன்றத்தினை நாடவேண்டி ஏற்பட்டது.
இலங்கையில் சட்டம் பயிலும் மாணவர்களுக்கு பிரசன்னா விதானகே எதிர் ஊடக அமைச்சர் சரத் அமுனுகம (முன்னர் ஊடகத்துறை அமைச்சராக இருந்தவர் இப்போது பிரதி நிதி அமைச்சர்) எனற வழக்கு நிருவாகச் சட்டத்தில் முக்கியமான ஒரு வழக்காகும்!
தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட பிரசன்ன விதானகே சமாதான காலத்தில் வன்னிக்கு அழைக்கப்பட்டவர். பல கலந்துரையாடல்கள் மற்றும், திரைத்துறைப் போராளிகளுக்கான பயிற்சிகளுக்ககாக பலதடவைகள் வன்னிக்கு சென்றவர். அந்த வகையில் வன்னியில் திரைப்படப் பயிற்சி பெற்ற பல திரைப்படவியல் மாணவர்கள் அவரையும் மானசீகக் குருவாக மதித்ததை நான் அறிந்துள்ளேன். இவரது திரைப்படங்களின் திரை பிரதியிலிருந்து ஒளிப் படிமங்கள் வரை அவர்கள் வரிக்கு வரி பேசிக்கொள்வதுண்டு!
அதற்காக மட்டும் அவரை ஒரு சிறந்த இயக்குனராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஆனால் திரைப்படம் பற்றிய அறிவைத் தேடுபவர்களுக்கும் மாணவர்களுக்கும் எப்படி ஒரு படம் அமைய வேண்டும் என்று பார்க்கக்கூடிய படங்களைத் தந்தவர்களில் ஒருவர் பிரசன்னா என்றால் அது மிகையல்ல!
எத்தனையோ திரைப்படங்கள் இன நல்லுறவு என்ற பெயர்களில் வந்துள்ளன.
கொட்டி வலிகய ,நோவியின மினிசு , நொவியின மினிசுன், மானவ வாரய சின்ன தேவதை போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை
நான் அவை பற்றி ஈழமுரசு. முரசொலி ,சரி நிகர் இதழ்களில் எழுதியிருக்கிறேன். தமிழர் என்றால் ஒரு புகையிரத நிலைய அதிபராக அல்லது வீட்டு வேலைக்காரனாக வரும் சித்தரிப்புக்களைத்தான் இத்தகைய அநேகத் திரைப்படங்கள் காட்டியுள்ளன.
பிரசன்னா விதானகே இத் திரை நேரியாலர்களிளிருந்து நெறியாளர்களிலிருந்து வித்தியாசமானவர் என்பதை அவரது திரைப்படங்களைப் பார்த்தவர்களும் அவரை அறிந்தவர்களும் அறிவர்.
யுத்தத்தினால் கொல்லப்பட்ட பெண் போராளிகள், ஆண் போராளிகள், பொதுமக்கள், குழந்தைகளின் நிர்வானப் படங்களையும் அரைகுறை ஆடைகளுடனான படங்களையும், காணொளிகளையும் தினசரி இணையங்களிலும், புளொக்பொஸ்றுக்களிலும், சமூக வலைத் தளங்களிலும் பதிவேற்றி தமது வியாபாரங்களை செய்பவர்களுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவரையும், விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் போராளிகளையும் வைத்து திரைப்படங்களை எடுத்து, பணமீட்ட முயல்பவர்களுக்கும், புதிதாக முழைத்துள்ள தமிழ்த் தேசியப் பித்தர்களுக்கும் உண்மைகளை விளங்கிக்கொள்ளும் மனோ நிலை இருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது….
எனினும் என் கவலையெல்லாம் சிங்களவர் என்ற காரணத்திற்காக எடுத்தவுடன் ஒரு சிறந்த கலைப் படைப்பாளியை நாம் எதிர்ப்பதால் நமது பிரச்சினைகளை உணர்ந்த, அறிந்த பலரை சிங்கள சமூகத்திடமிருந்து நாம் இழக்க நேரிடும் என்பதுவே!
Via: GTN
















