இங்கிலாந்தில் உள்ள ஒரு இளைஞர் மதுவில் உயிருள்ள மீன் ஒன்றை போட்டு அப்படியே விழுங்கினார். இவர் மீது விலங்குகள் காப்பகம் தொடர்ந்த வழக்கில் இவருக்கு £1,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள Yorkshire நகரில் உள்ள McDonald’s in Wakefield என்ற மதுபாருக்கு Robert Atkinson என்ற 20 வயது இளைஞரும், அவருடைய நண்பர் Lewis Summers என்ற 19 வயது இளைஞரும் மது அருந்த வந்தனர். இருவரும் ஆளுக்கொரு பீர் பாட்டில் ஆர்டர் செய்தனர். பின்னர் Robert Atkinso ஒரு பாட்டில் பீரை எடுத்த்கிளாசில் ஊற்றி, அங்கு அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியில் உள்ள ஒரு மீனை எடுத்து பீரில் கலந்து அந்த உயிருள்ள மீனையும் சேர்த்து பீரை குடித்தார். இந்த காட்சியை அவருடைய நண்பர் Lewis Summers, தனது மொபைலில் வீடியோ எடுத்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானவுடன் விலங்குகள் நல காப்பகம் உயிருள்ள மீனை பீரில் கலந்து குடித்த இளைஞர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி Robert Atkinso என்ற இளைஞருக்கு £1,500 அபராதம் விதித்தார். இந்த காட்சியை வீடியோவாக எடுத்த அவருடைய நண்பருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
















