சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டாம்: கடுமையான தொனியில் கோத்தபாய.

Gotabaya5பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று வெள்ளிக் கிழமை முஸ்லிம் பிரதி நிதிகளைச் சந்தித்து கோத்தபாய ராஜபக்ச கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இந்தக் கலந்துரையாடலின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இறுதி முடிவொன்று எட்டப்படும் வரை சந்திப்பு தொடர்பாக எதனையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என கடுமையான உத்தரவொன்றை கோத்தபாய விடுத்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply