சண்டீகரை சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர், பெண்களை பலாத்காரம் செய்ய முயன்று உள்ளாடையில் (பிரா) கை வைத்தால் அது மின்னதிர்ச்சி அளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளார்.
யூலை 1ம் திகதி முதல் 20ம் திகதி வரை டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான அறிமுக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது, பார்வைக்கு வைக்க தெரிவானவர்கள் மட்டும் அந்த 20 நாள், நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைக்கவுள்ளனர்.
இதில் மனிஷா மோகன் என்ற சண்டீகரைச் சேர்ந்த வானூர்தி பொறியியல் மாணவி தயாரித்துள்ள இந்த உள்ளாடையிற்கும் அனுமதி கிடைத்துள்ளது.
மனிஷா இதுபற்றி கூறுகையில், இந்த உள்ளாடையை வலுக்கட்டாயமாக அவிழ்க்க முயலும்போது, தொடும்போது, மின்னதிர்ச்சி ஏற்பட்டு கைகள் கருகும் அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும், அதை அணிந்திருக்கும் பெண்ணின் பெற்றோர் மற்றும் காவல்துறைக்கு, சம்பவம் நடைபெறும் இடம் குறித்த தகவல் குறுஞ்செய்தியாக சென்றடையும் வகையில், ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
பலாத்காரம் நடைபெறும்போது, சம்மந்தப்பட்ட பெண்ணின் உள்ளாடையை குற்றவாளிகள் கழற்ற முயலுவது வழக்கமானது.இதை மனதில் கொண்டுதான் மின்னதிர்ச்சி ஏற்படுத்தும் கருவியை அதில் பொருத்தியுள்ளேன்.
கடந்தாண்டு நடந்த டெல்லி மாணவி பலாத்கார சம்பவம்தான் இதுபோன்ற கருவியை கண்டுபிடிக்க உத்வேகம் அளித்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பலாத்காரம் செய்பவர்களுக்கு இந்த உள்ளாடை மின்னதிர்ச்சி அளிக்கும் என்றபோதிலும், அதை அணிந்துள்ள பெண் ஆடை மாற்றும்போது, மின்னதிர்ச்சி ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
















