நவநீதம்பிள்ளையின் நிபுணர்கள் குழு அரசுக்கு எதிரான இராஜதந்திர ஆளில்லா விமான தாக்குதல் நடத்த திட்டமா….?

navanethem-pillay2இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்குழுவிற்கு உதவ ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ள நிபுணர்கள் குழு இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ராஜதந்திர ரீதியிலான ஆளில்லா விமான தாக்குதல் என இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியும் சிரேஷ்ட அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். அண்மையில் அளுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத கலவரங்களும் இந்த குழுவின் விசாரணைகளுக்கு பரிந்துரைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவங்கள் இடம்பெற்ற மறுதினம் சம்பவங்களுக்கு கண்டனம் வெளியிட்டிருந்த நவநீதம்பிள்ளை, கொழும்பு அரசாங்கம் அனைத்து சிறுபான்மை மதத்தினரை பாதுகாக்க வேண்டும் அழைப்பு விடுத்திருந்துடன் அஸ்மா ஜஹாங்கீரை நிபுணர்கள் குழுவின் உறுப்பினராக நியமித்திருந்தாக ஜயலதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார். பாலஸ்தீனத்தின் காசாவில் இடம்பெற்ற மோதல்களில் இடம்பெற்ற மீறல்களை கண்டறிய ஐ.நா ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் என்ற ஒரு நபரை மட்டுமே நியமித்திருந்தது.

எனினும் இலங்கை மீதான விசாரணைகளுக்கு மூவர் கொண்ட குழுவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நியமித்துள்ளது. இந்த குழு மிகவும் வலுவானதும் கனத்தை எடையையும் கொண்டது எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார். 12 உறுப்பினர்களை கொண்ட ஐ.நாவின் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குழு எதிர்வரும் செப்டம்பர் மாதம் தனது விசாரணை அறிக்கையை கையளிக்க வேண்டும் என்பதுடன் இலங்கை அரசங்கத்தின் ஒத்துழைப்புகளை பொருட்படுத்தாமல் இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.

Tags: , ,

Leave a Reply