கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் நடித்து வருகின்றார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் என்றாலே வேகமான பேச்சும், பஞ்ச் வசனங்களும் தான். எனவே லிங்கா படத்திற்காக கே.எஸ். ரவிக்குமார் இரவு பகலாக தன்னுடைய உதவி இயக்குனர்களுடன் இணைத்து ரஜினிகாந்திற்காக பார்த்து பார்த்து பஞ்ச் வசனத்தை தயார் செய்துள்ளார்.
படப்பிடிப்பின் போது பஞ்ச் வசனங்களை எப்படி உச்சரிப்பது என ரஜினியிடம் கே.எஸ்.ரவிக்குமார் விளக்கியுள்ளார். ஆனால் ரஜினி கொடுத்த வசனங்களை ரஜினி பேசமுடியாது என கூறி மறுத்துள்ளார். இந்த படத்தில் பஞ்ச் டயலாக் தேவையில்லை என்றும், இனிமேல் நான் பஞ்ச் லயலாக் காட்சிகளில் நடிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். ரஜினியின் இந்த வார்த்தையை கேட்டவுடன் கே.எஸ்.ரவிக்குமாரும் லிங்கா படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது அறிமுகமாகும் சிறு நடிகர்கள் கூட தங்கள் படத்தில் பஞ்ச் டயலாக்குகள் வைக்கின்றனர். இந்நிலையில் தானும் பஞ்ச் டயலாக்குகளை பேசுவது சரியாக இருக்காது என ரஜினி தெரிவித்துள்ளார். ஆனால் படக்குழுவினர்களோ, ‘பஞ்ச் டயலாக்குகளை ஆரம்பித்து வைத்ததே நீங்கள் தான். ரசிகர்களும் உங்கள் படத்தில் பஞ்ச் டயலாக்குகளை தான் எதிர்பார்ப்பார்கள். எனவே பஞ்ச் டயலாக்குகளை நீங்கள் கண்டிப்பாக பேசவேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் ரஜினிகாந்த் பிடிவாதமாக பஞ்ச் டயலாக் வசனங்களை பேச மறுத்து வருவதால், அவரை சமாதானப்படுத்த தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முயற்சி செய்து வருகிறார்.
















