சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஆர்யாவுக்கும் அவருடைய காதலிக்கும் ஜெயம் ரவி டிரைனிங் கொடுத்ததாக ஒரு செய்தி தற்போது கசிந்து வருகிறது. இதுகுறித்த விபரம் வருமாறு:
ஜெயம் ரவி தற்போது ஹன்சிகாவுடன் ‘ரோமியோ ஜூலியட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஸ்டார் ஓட்டலில் உள்ள ஜிம் ஒன்றில் டிரைனிங் கொடுப்பவராக நடிக்கிறார். இந்த ஜிம்மிற்கு ஆர்யா தனது காதலியுடன் வருவது போன்றும், அவர்கள் இருவருக்கும் ஜெயம் ரவி ஜிம்மில் எப்படி ஒர்க் அவுட் செய்ய வேண்டும் என்று டிரைனிங் கொடுப்பது போன்றும் ஒரு காட்சி இந்த படத்தில் வருகிறது.
நெருங்கிய நண்பரான ஜெயம் ரவிக்காக ஆர்யா இந்த படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க உள்ளார். ஆர்யாவின் காதலியாக நடிக்க த்ரிஷாவிடம் பேசி வருவதாக இப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். ஆர்யா ஏற்கனவே ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் அவருடைய நண்பர் உதயநிதிக்காக கெளரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை எஸ்.நந்தகோபால் தயாரிக்கின்றார். லக்ஷ்மன் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வரும் 2015ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்கும் லக்ஷ்மன் ஏற்கனவே கள்வனின் காதலி என்னும் படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிட்த்தக்கது. இதுதான் இவர் இயக்கும் முதல்படம் ஆகும்
















