மதுரையில் திரண்ட பெண்கள் உணர்சி ததும்ப இசைப்பிரியாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்: நடுகல் ஒன்றும் நாட்டப்பட்டது.
(28) மாலை இன் நிகழ்வு மதுரையில் இடம்பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான பெண்கள் இதில் கலந்துகொண்டு உணர்ச்சியோடு மெழுகுவர்திகளை ஏற்றினார்கள். இசைப்பிரியா தொடர்பான பதாதைகளும், ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களின் பாதாதைகளையும் அவர்கள் கைகளின் ஏந்தி நின்ற காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
ஈழத் தமிழர்கள் அனுபவித்த இன்னல்களை சுமந்து, ஈழத் தமிழர்களுக்காக நாம் குரல்கொடுக்க இருக்கிறோம் என்று தமிழகத்தில் உள்ள உறவுகள் மீண்டும் ஒரு முறை உரக்கச் சொல்லியுள்ளார்கள்.
















