மூட்டைப்பூச்சிக்கு பயந்து யாராவது வீட்டை கொளுத்துவார்களா? என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் சிலந்தி பூச்சிக்கு பயந்து உண்மையிலேயே தனது வீட்டை தீ வைத்துள்ளார் என்கிற அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள Hutchinson, Kansas, என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் Ginny Griffith என்ற 34 வயது பெண், தனது வீட்டிற்குள் ஒரே ஒரு சிலந்தி இருப்பதை பார்த்தார். அதை பார்த்தவுடன் பயந்துபோன Ginny Griffith, அதை பிடிப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் அது தப்பித்து ஓடிவிட்டதால், சிகரெட் லைட்டரை எடுத்து வீட்டில் உள்ள துணிகளில் தீ வைத்துவிட்டு வேகமாக வெளியே ஓடிவந்துவிட்டார்.
சிறிதுநேரத்தில் தீ மளமளவென எரிந்து வீட்டில் உள்ள முக்கிய பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீஸ் அதிகார் Ginny Griffith அவர்களை கைது செய்து விசாரணை செய்து வர்கின்றனர்.
















