உடம்பில் சுரங்க பாதையுடன் வாழும் விநோத மனிதர்.

hole_man_004ஜேர்மனியில் கலைஞர் ஒருவர் தனது கன்னத்தில் துளையிட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியின் குசாபெர்க் நகரத்தை சேர்ந்த ஜோயல் மிக்லர் (23) என்ற கலைஞர் தனது சிறு வயதிலிருந்தே உடம்பில் ஏதாவது மாற்றங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளார். தற்போது இவர் தனது உடம்பில் 27 துளைகளும், 6 பச்சைகளும் குத்திக் கொண்டுள்ளார்.

காது குத்துதலில் ஆரம்பித்த இந்த மோகம் தற்போது 4000 பிராங்க் செலவிடும் வரை வளர்ந்துள்ளது. மிக்லர் தனது கன்னத்தில் 36 மி.மீ அளவு துளை ஒன்று போட்டுக் கொண்டுள்ளார். இதனை 40 மி.மீற்றராக நீட்டிக்க போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது போன்ற விடயங்கள் தனது அன்றாட வாழ்க்கையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்றும் தனது தாயும் இதற்கு ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply