கடந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள கிறடல்-டவுன் என்னும் நகரில் இருந்து வந்த அவசர அழைப்பை அடுத்து, பொலிசாரும் பரா மெடிக்ஸ் பிரிவினரும் குறித்த வீட்டிற்கு விரைந்து சென்றார்கள்.
அங்கே ரத்தவெள்ளத்தில் இருந்த மருத்துவர் அத்துகோரளவை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தலையில் பலத்த அடி காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இறந்த அத்துகோரளவின் மனைவி(34) தினேந்தரா அத்துகோரளவும் ஒரு மருத்துவர் ஆவார்.
பின்னர் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை அவுஸ்திரேலிய பொலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். இந்த தம்பதிகள் சிங்களவர்கள் என்றும், இவர்கள் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்றும் பொலிசார் தற்போது உறுதிசெய்துள்ளார்கள். இது இவ்வாறு இருக்க, கடந்த வெள்ளியன்று மனைவியை நீதிமன்றில் பொலிசார் ஆஜர்படுத்தியுள்ளார்கள்.
அவர் எந்த ஒரு வாக்குமூலத்தையும் கொடுக்கவில்லை. அதேவேளை பிணைக்கும் அவர் விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவன் தினத்தன்று, இவர்கள் வீட்டில் சத்தம் கேட்டதாகவும் அங்கே பெரிய வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த மருத்துவர்கள் இருவரையும் தமக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ள அயலவர்கள், இவர்கள் வீட்டில் வழமைக்கு மாறாக சத்தம் கேட்டதால், தாம் பொலிசாருக்கு அறித்ததாக தெரிவித்துள்ளார்கள்.
பொலிசார் விரைந்து வந்தும் கணவரை காப்பாற்ற முடியவில்லை. இவர்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள, மருத்துவமனை ஒன்றிலேயா குறித்த தம்பதிகள் வேலைசெய்து வந்துள்ளார்கள். மனைவியே கணவனை அடித்துக் கொலைசெய்துள்ள விடையம் அந்த மருத்துவமனையில் வேலைபார்கும் பலரை அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
















