கடந்த ஒரு ஆண்டுக்கு பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த தொகுதிக்கு இன்று சென்று நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த விழாவில் பேசிய முதல்வர் கடந்த நாடாளுமன்றறதேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சியினர்களை எருமை, கழுதை கதையை கூறி ஆவேசமாக பேசினார். மேலும் அவர் தனது பேச்சில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டும்.
முதல்வர் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை”
மன்னரிடம் பரிசு கேட்டு இரு புலவர்கள் சேர்ந்து வந்தனர். மன்னர் இருவரையும் தனித் தனியாக அழைத்துப் பேசினார்.
முதல் புலவரிடம், “உங்களோடு வந்திருக்கும் புலவர் எப்படிப்பட்டவர்? என்று கேட்டார் மன்னர். அதற்கு முதல் புலவர், “அவர் ஒரு மக்கு. எருமை” என்று கூறினார். இதைக் கேட்ட மன்னர், “நன்றி புலவரே, நாளை காலை அரசவைக்கு வாருங்கள்” என்று கூறினார். பின்னர் இரண்டாவது புலவரை அழைத்து, “உங்களோடு வந்திருக்கும் புலவர் எப்படிப்பட்டவர்?” என்று மன்னர் கேட்டார். அதற்கு இரண்டாவது புலவர், “அவர் ஒரு மடையர், கழுதை” என்றார். இதைக் கேட்ட மன்னர், “நன்றி புலவரே. நாளை காலை அரச சபைக்கு வாருங்கள்” என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தார். மறுநாள் சபை கூடியது. இரு புலவர்களும் வந்து காத்திருந்தனர்.
“புலவர்களே, உங்களில் ஒருவரை மற்றவர் எருமை என்றும், கழுதை என்றும் நீங்கள் சொன்னீர்கள். எருமைக்கு பரிசு கொடுத்தால் கழுதைக்கு கோபம் வரும். கழுதைக்குப் பரிசு கொடுத்தால் எருமைக்கு கோபம் வரும். நானோ மனிதர்களில் சிறந்த புலவர்களுக்குப் பரிசு தருபவன். இங்கே எருமைக்கும், கழுதைக்கும் வேலையில்லை” என்று கூறினார் மன்னர். இந்த மக்களவைத் தேர்தலில் நீங்கள் அளித்த தீர்ப்பு இந்த மன்னர் கூறிய தீர்ப்பு போல் அமைந்துள்ளது. அதாவது, கடமையைச் செய்பவர்களை, உரிமையைத் தட்டிக் கேட்பவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்துள்ளீர்” என்று பேசினார்.
















