சீனாவில் போலீஸ்காரர் ஒருவர் செய்த தவறினால் போலீஸ் வேன் ஒன்று இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில் அந்தரத்தில் மிதக்கின்றது.
சீனாவில் உள்ள 35 வயதான Park He என்பவர் போலீஸ் வேன் ஓட்டும் டிரைவராக பண்புரிந்து வருகிறார். இவர் நேற்று தனது பணிகளை முடித்துவிட்டு வேனை பார்க் செய்வதற்காக தான் பணிபுரியும் Shandong Province, East China என்ற காவல்நிலையத்திற்கு வேனை ஓட்டி வந்தார். அப்போது பார்க்கிங் பகுதியில் வேனை பார்க் செய்ய பின்பக்கமாக வேனை செலுத்தியபோது, வேன் திடீரென அவருடைய கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு பின்னால் சென்றது.
பார்க்கிங் பகுதி மேல்மாடியில் இருந்ததால் தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு வேன் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் விழுந்து நடுவில் சிக்கிக்கொண்டது. இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில் மூன்றாவது மாடியில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வேனை மீட்புப்படையினர் விரைந்து வந்து மீட்டனர். ஓட்டுனர் காயமின்றி உயிர் தப்பினார். எனினும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த சிறிய விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
















