வில்பத்து காட்டில் இருந்தே விமானத்தை ஏவுகணை மூலம் அடித்தோம்: 2 புலிகள் உறுப்பினர்கள் ஒப்புதல் வாக்குமூலம்..!

ltte1இலங்கை வான் படைக்கு சொந்தமான “அண்டோனோவ் 34″ என்ற விமானத்தை தாமே வீழ்த்தினோம் என்று 2 விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

2000ம் ஆண்டு பலாலி விமான நிலையத்தில் இருந்து “அண்டோனோவ் 34″ ரக விமானம் ரத்மலானை விமான நிலையம் நோக்கிச் பறந்தது. இதில் சுமார் 44 பேர் இருந்தார்கள். அந்தவேளை வில்பத்து காட்டுக்குள் மறைந்திருந்த ஜெகன் மற்றும் வல்லமை ஆகிய இருவரும் ஏவிகணை கொண்டு இந்த விமானத்தை தாக்கியுள்ளார்கள். இதில் 4 ரஷ்யர்களும் இருந்துள்ளார்கள் என்ற விடையம் பின்னரே தெரியவந்தது.

கடந்த 2012ம் ஆண்டு காட்டிக்கொடுப்பு ஒன்றினூடாக இந்த இருவரையும் பொலிசார் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்துள்ளார்கள். இவர்களது வழக்கு அனுராதபுரம் நீதிமன்றில் நடந்து வருகிறது. நடைபெற்ற விசாரணையின் போது அவர்கள், இந்த விமானத்தை தாமே சுட்டு வீழ்த்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதனையடுத்து நீதிபதி ககீம் சுவர்நாதிபதி, இவர்களை ஜூலை 22 மீண்டும் நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply