அரசாங்கத்தினால் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும்?

cellphoneஅரசாங்கத்தினால் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அனுமதியின்றி; தொலைபேசிக்குள் புகுந்து உளவுப் பணிகளில் ஈடுபட சாத்தியங்கள் காணப்படுகின்றன.

உலகின் பல நாடுகளின் அரசாங்கங்கள் இவ்வாறு தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கின்றன.

கலிலியோ என்னும் கருவியைக் கொண்டு இவ்வாறு உளவு பார்க்கப்படுவதாக கஸ்பர்ஸ்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அன்ட்ரைட், ஐ.ஓ.சிஸ், வின்டோஸ், பிளக்பரி போன்ற தொலைபேசிகளுக்குள் இலகுவில் பிரவேசிக்க முடியும்.

தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள்ää குறுந்தகவல்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்வது மட்டுமன்றி தொலைபேசியின் மைக்கை ஒன் செய்து சுற்றுச் சுழலின் சத்தங்களைக் கூட அறிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு நவீன கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அபிவிருத்தி அடைந்து வரும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இவ்வாறு உளவு பார்க்கப்படுகின்றது.

சில நாடுகளில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கும் மாற்றுக் கருத்துக்களை முடக்குவதற்கும் இவ்வாறு தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply