கோவா அமைச்சருக்கு குட்டை பாவாடை அனுப்பும் போராட்டம். காங்கிரஸ் கட்சி அறிவித்தது ஏன்?

goa-ministerநேற்று காலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஒருவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்க தமது ஆட்களை அனுப்புவேன் என்று பேசியதால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இன்று மேலும் ஒரு அரசியல்வாதி பெண்கள் குறித்த ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவா மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் சுதின் தவாலிகர் என்பவர் இன்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு அவர்கள் அணியும் குட்டைப்பாவாடையும், மது அருந்தும் பழக்கமும்தான் காரணம்: என்று கூறியுள்ளார். பெண்கள் குட்டைப்பாவாடைகள் அணிந்து மதுபார்களுக்கு சென்று மதுகுடித்துவிட்டு கும்மாளம் இடுவதால்தான் பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது. எனவே பெண்கள் குட்டைப்பாவாடை அணிவதையும், மதுபார்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த கருத்தை கோவா முதல்வரும் ஏற்றுக்கொண்டதாக கூறினார். விரைவில் கோவா மாநிலத்தில் பெண்கள் மதுபார்களுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சுதின் தவாலிகரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி, கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவருக்கு குட்டை பாவாடைகளை அனுப்பி வைக்கும் போராட்டத்தை நடத்தப்போவதாக கூறியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் துர்கதாஸ் காமத் கூறுகையில், ”பொதுப்பணித்துறை அமைச்சருக்கு குட்டைப் பாவாடைகளை அனுப்பி வைக்க உள்ளோம். இதன் மூலம் ஒரு கலாச்சாரத்தை குட்டைப்பாவாடை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை நிரூபிக்க காத்திருக்கின்றோம்’ என்றார்.

Tags: , ,

Leave a Reply