இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த 30 தமிழ் யுவதிகள் இராணுவ படைப்பிரிவில் இணைக்கப்பட்டனர்

tamil-miltraryஇலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02.07.14) தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர்.

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இவ்வாறு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply