”எல்லோருக்கும் முன்னால் உன் ஆடைகளை கலைவேன்” பெண்ணை மிரட்டிய சிவசேனா எம்.எல்.ஏ

mla-threatensமும்பை கிழக்கு பந்தரா காந்திநகர் சங்கம் பகுதியை சேர்ந்த 50 வயது என்ற பெண் ஒருவர் பாந்தராவில் உள்ள கேர்வாடி பகுதி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்து உள்ளார். அதில் கிழக்கு பந்தரா தொகுதி எம்.எல்.ஏ பிரகாஷ் பால சவந்த் ( வயது 64) எல்லோர் முன்னிலையிலும் உனது ஆடைகளை அகற்றி உன்னை அடிப்பேன் என கூறினார்,என புகாரில் கூறி உள்ளார்.அவரது புகாரை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த தகவல் அறிந்ததும் நுற்றுக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் போலீஸ் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அமைதிபடுத்தினர்.

இது குறித்து புகார் அளித்த பெண் கூறியதாவது:- பெண்களுக்கு எதிராக அவமானபடுத்தும் வகையில் பேச யாருக்கும் உரிமை இல்லை. ஒரு எம்.எல்.ஏ எல்லோருக்கும் முன்னிலையில் பகிரங்கமாக இவ்வாறு பேசுவது மிகவும் மோசமான செயலாகும்.என்று கூறினார்.

பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் 3 பிரிவுகளில் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags: , ,

Leave a Reply