திருவள்ளூர் அருகே ஆடு மேய்க்கும் போது 12 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய 67 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த 12 வயது சிறுமி, திருவள்ளூர் அடுத்த வரதாபுரத்தில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி இருந்தார். இவரது தாய், தந்தை இறந்து விட்டனர்.
சித்தி வீட்டில் இருந்த சிறுமி ஆடு மேய்த்து வந்தார். இந்நிலையில், அடிக்கடி வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதையடுத்து, சிறுமியை அருகில் உள்ள பட்டரைபெரும்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர், சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.
இதில் அதிர்ச்சி அடைந்த அவரது சித்தி, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (67) என்ற முதியவர் ஆடு மேய்க்கும்போது சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
ராஜ்குமாரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
















