கச்சத்தீவை மீட்க புதிய பிரமாணப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

jayalalitha61-600-jpgகச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை என்று மத்திய அரசின் அறிவிப்பு தமிழக மீனவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அரசு பன்னாட்டுச் சட்ட விதிகளை மேற்கோள் காட்டி கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து அதை திரும்பவும் இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாலர் வைகோ வலியுறுத்தி உள்ளார். மேலும் இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதாவும் விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமாக இருந்ததற்கு ஆவண சான்றுகள் உள்ளது. 1974, 1976ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்கு இந்தியாவால் தாரைவார்க்கப்பட்டது. அரசியல் சட்டதிருத்தம் இல்லாமல் கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது செல்லாது. எனவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும்”

ஆனால், கச்சத்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை என மத்திய அரசு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெறக்கோரி 1991ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, கச்சத்தீவு தொடர்பாக திருத்தப்பட்ட புதிய பிரமாண பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

முதல்வரின் கடிதத்தால் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: , ,

Leave a Reply