72 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டும் தனது செருப்புகளை கேட்ட ஒடிசா வாலிபர்…

chennai-porurசென்னை போரூர் அருகில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த மூன்றாவது நாள் காலையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் மோப்ப நாய் ரஸ்டாம் இடிபாடுகளுக்கிடையே மோப்பம் பிடித்து வந்தது. அவ்வாறு வந்த போது கான்கிரீட் சிலாப் ஒன்றின் துளைக்குள் கண்களை செலுத்தியவாறே அது குரைக்க ஆரம்பித்தது.

அவ்வாறு அது குரைக்க ஆரம்பித்தவுடன், இடிபாடுகளுக்கிடையே யாரேனும் இருக்கக்கூடும் என அதன் பயிற்றுனருக்கு புரிந்தது. உடனடியாக துரிதமாக செயல்பட்ட மீட்புப்படையினர் எட்டு மணி நேரம் போராடி மஞ்சள் நிற டீ-சர்ட் அணிந்த ஒடிசாவை சேர்ந்த 29 வயதான விகாஸ் குமார் என்பவரை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட பின் அவர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? தனது செருப்பு எங்கே என்று அவர் மீட்பு படையினரைப் பார்த்து கேட்டுள்ளார்.

அவருக்கு பொறுமையாக பதிலளித்த மீட்பு படை தலைவரான எம். கே. வர்மா, புதிய செருப்பை தானே அவருக்கு வாங்கி தருவதாக தெரிவித்தார். பின்னர் பாட்டிலில் வழங்கப்பட்ட குடிநீரை அருந்திய அவர் வானத்தை பார்த்தவாறே நீண்ட நேரம் சோகத்துடன் உட்கார்ந்திருந்தது மற்றவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Tags: , ,

Leave a Reply