முகமாலையை அதிர வைக்கும் பெண் புலியின் உள்ளாடை, எழும்புக் கூடுககள்…

mugamalaiமுகமாலைப்பகுதியில் நேற்று எலும்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு தற்போது இடம்பெற்று வருகின்றது. சர்வதச நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்படும் குறத்த கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டிருநத வேளை இன்று குறித் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாக ஊழியர் ஒருவர் கருத்து தெரிவித்தார். குறித்த எலும்கூடுகள் பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் ரவைகளும், விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் சீருடை தொப்பி ஒன்றும், சலவைத்தூள் உறைகளும் காணப்பட்டது. குறித்த எலும்புக்கூட்டுடன. பெண்ணினுடைய உள்ளாடையும் காணப்பட்டமையால் அது பெண்ணினுடையது என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இடத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் இரசாயன பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது முகமாலைப் பகுதியில் மனித எலும்புக்கூட்டுத் தொகுதியொன்று மீட்கப்பட்டுள்ளது

முன்னைய போர் முன்னரங்கப்பகுதியான முகமாலைப் பகுதியில் மனித எலும்புக்கூட்டுத் தொகுதியொன்று இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மனிதநேய கண்ணி வெடியகற்றல் பணியில் ஈடுபட்டுவரும் ஹலோரெஸ்ட் நிறுவனத்தின் பணியாளர்களினாலேயே அது மீட்கப்பட்டள்ளது.

கைவிடப்பட்ட காவலரண் அமைந்திருந்த பகுதியில் பணிகளை மேற்கொள்ளும் போதே மேற்படி எலும்புக்கூடு இருப்பதை அவதானித்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply