பெயிண்ட் உடை அணிந்து டாப்லெஸ்ஸாக சாலையில் நடந்து வந்த இளம்பெண். டென்மார்க்கில் பெரும் பரபரப்பு.

denmark-paint-dressடென்மார்க் நாட்டில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தான் புதிதாக ஆரம்பிக்கவுள்ள ஒரு தொடரை விளம்பரப்படுத்துவதற்காக டாப்லெஸ் பெண் ஒருவருக்கு உடை போன்ற பெயிண்ட் அடித்து சாலையில் நடக்கவைத்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ யூடியூப் இணையதளத்தில் சாதனை புரிந்துள்ளது.

டென்மார்க் நாட்டின் தலைநகர் Copenhagen நகரின் அருகில் உள்ள Frederiksberg என்ற இடத்தில் உள்ள ஒரு Danish TV என்ற தொலைக்காட்சி நிறுவனம் தனது புதிய தொலைக்காட்சி தொடரை வித்தியாசமாக விளம்பரப்படுத்த மாடல் ஒருவரை டாப்லெஸ் ஆக நிற்கவைத்து உடலில் கருப்பு நிற பெயிண்ட் அடித்து சாலையில் நடக்கும்படி செய்தது. இதை யாரும் அறியாமல் தொலைக்காட்சியினர் வீடியோ எடுத்தனர்.

உடலின் மேற்பகுதியில் வெறும் பெயிண்ட் மட்டும் அடித்துக்கொண்டு அந்த மாடலிங் பெண் சாலையில் நடந்து சென்றார். பின்னர் ஒரு ரெஸ்டாரெண்ட்டில் வைன் ஆர்டர் செய்து குடித்துவிட்டு சாவகாசமாக சென்றதை அனைவரும் மிகவும் அதிசயத்துடனும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஒருசிலர் தங்கள் மொபைல் போனில் அந்த பெண்ணை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இந்த வீடியோ யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட மிகக்குறுகிய காலத்தில் இந்த வீடியோ 150,000 நபர்கள் பார்த்து சாதனை புரிந்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply