இராணுவத்தை வெளியேற்று; தமிழ் கட்சிகள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம்

protest5தமிழ் மக்களது நிலங்களை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து நடாத்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

பொதுமக்களது நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டு குறித்த நிலங்களில் தமிழ் மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மு.ப 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரையான ஒரு மணி நேர கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

கடந்த மே மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய போராட்டம் நடாத்தப்படவுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று இடம்பெறும் போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply