யாழ் கொக்குவில் தலையாழியிலுள்ள வீட்டின் மாமரத்தில் பல்கலைக்கழக மாணவரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவனான வவுனியாவைச் சேர்ந்த சிவலிங்கம் யசோதரன் (வயது-24) என்ற மாணவனே மேற்படி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
கொக்குவில் தலையாழிப் பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு குடியிருந்த இரு மாணவர்களில் ஒருவர் தனது சொந்த ஊருக்கு ஒரு கிழமைக்கு முன்னர் சென்றுவிட்டார் எனவும் தனியாக வசித்து வந்த குறித்த மாணவன் இன்று காலை ஊருக்குச் செல்வதாக வீட்டின் உரிமையாளருக்கு தெரிவித்துள்ளார். நேற்று இரவு 9 மணியளவில் வீட்டின் உரிமையாளர் தூங்கச் சென்று விட்டு அதிகாலை எழுந்து பார்க்கையில் வீட்டின் முற்றத்தில் மாமரம் ஒன்றில் துாக்கில் தொங்கிய படி இருந்ததை கண்டுள்ளார். பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்க சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த மாணவனின் இரு கையிலும் பிளேட்டினால் கீறிய இரத்தக் காயங்கள் காணப்பட்டுள்ளதுடன் குறித்த பிளேட்டையும் பொலிசார் மீட்டதுடன் அவரது காற்சட்டை பொக்கற்றினுள் இருந்து அவரது கைத் தொலைபேசியையும் மீட்டுள்ளனர். சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை
















