மலேசிய காவல்துறையினரின் சுற்றிவளைப்பு தேடுதலின் போது நான்கு ஈழத்தமிழர்களை விடுதலைப்புலிகள் என்ற குற்றச்சாட்டின் கீழ் மலேசிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் விடுதலைப்புலிகளின் முதன்மையானவர்கள் என மலேசிய காவல்துறை அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர் மற்றும் செலாங்குர் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்த தேடுதலை நடத்தியுள்ளனர்.
இவர்களின் இவரிடம் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அடையாள அட்டை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் கைது செய்யப்பட்ட 14 பேரில் ஏழு பேருக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிறுவனத்தின் அடையாள அட்டைகள் இருப்பதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்படும் எனவும், கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
















