லண்டனில் வசித்து வரும் 8 ஈழத் தமிழர்களுக்கு எதிராக கொழும்பில், கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.
குறித்த இந்த 8 நபர்களும் தமிழர்கள் என்றும் அவர்கள் சர்வதேச அளவில் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியே, கொழும்பில் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு முதல் கட்டத்தில் உள்ளதால், இதில் கூறப்பட்டுள்ள நபர்களின் பெயர் விபரங்களை தற்போது பெறமுடியவில்லை.
லண்டனில் செயல்பட்டு வரும் செயல்பாட்டாளர்கள், மற்றும் சில அமைப்புகளின் தலைவர்கள் இதில் உள்ளடங்கலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள தமிழ் செயல்பாட்டாளர்களை வரும் செப்ட்டெம்பர் மாதத்திற்கு முன்னதாக, முடக்க வேண்டும் என்று இலங்கை அரசு கங்கணம் கட்டி வருகிறது.
அடுத்த ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னர் சில தமிழர்களை அப்படியே லண்டனில் முடக்கவேண்டும் என்று சிங்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்தே சிங்கள புலனய்வு இவ்வாறு இவர்கள் மீது வழக்குகளை தொடுத்துள்ளது.
குறித்த 8 பேரும் இலங்கைல் இல்லாத நிலையில் இந்த வழக்கை நடத்தி முடித்து, தீர்ப்பை வெளியிட கொழும்பு நீதிமன்றம் தயாராகி வருகிறது. இது தொடர்பான மேலதிக செய்திகள் விரைவில் இணையத்தில் வெளியாக உள்ளது
















