பிரித்தானிய கடற்கரைகளில் அரை குறை ஆடைகளோடு கலக்கும் கன்னிப் பெண்கள் ! சூடு ஏறியதால் வந்த விபரீதம் என்கிறார்கள்.

girlsபிரித்தானியாவில் தற்போது கோடைகாலம் கொடி கட்டிப் பறக்கிறது. வெப்பம் சுமார் 25 டிகிரிவரை சென்றுள்ளதால் பிரித்தானிய கடற்கரையை நோக்கி பலர் படையெடுத்து வருகிறார்கள். அட்டலாந்திக் கடலோடு பிரித்தானிய கடல் கலப்பதால் , பிரித்தானிய கடல் பகுதி எப்பவுமே மிகவும் குளிராகவே இருக்கும்.

கோடை காலங்களில் கூட இது மிகவும் குளிராக தான் இருக்கும். கடற்கரைக்கு செல்லலாமே தவிர இறங்கி குளிப்பது என்பது புளியங்கொப்புதான். ஆனால் தற்போது நடந்து வரும் பருவ நிலை மாற்றமோ என்னமோ தெரியவில்லை, பிரித்தானிய கடல் கூட சற்று வெப்பமடைந்துள்ளது. இதனால் மக்கள் இறங்கி குளிக்கும் அளவு அதன் வெப்ப நிலை அதிகரித்து உள்ளது. அது மட்டும் அல்ல, வெப்ப நாடுகளில் கடலில் காணப்படும் ஜெல்லி மீன்கள் கூட தற்போது பிரித்தானிய கடலில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இவற்றில் சில ஆபத்தான நச்சுத்தன்மை கொண்ட ஜெல்லி மீன்களும் இருப்பதால் பெரும் அச்சமும் நிலவுகிறது. ஆனால் பெண்களும் ஆண்களும் விட்டபாடாக இல்லை. கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், என்னும் இல்லாதவாறு பிரித்தானிய கடற்கரைகள் களை கட்டியுள்ளது. மேலும் இந்த வார இறுதியில் கூட நல்ல வெப்ப நிலை நிலவும் என்று கால நிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. சூடு கூடியதால் அரை குறை ஆடைகளோடு பெண்கள் கடற்கரையில் அலைந்து திரிந்து ஆண்களை மேலும் சூடேற்றி வருகிறார்கள்.

Tags: , ,

Leave a Reply