சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு சிறீலங்காவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
உள்ளக விசாரணைப் பொறிமுறைமைகளை சிறீலங்கா அரசாங்கம் மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையிலான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றின் அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான சவால்கள் மற்றும் அழுத்தங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு தெளிவாக புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே சர்வதேச நாடுகளுடன் சிறீலங்கா ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















