அப்பாவை ஏன் கொண்டு செல்கிறீர்கள் என்று கதறிய மகன் இன்று மனநோயாளி : தாயார் சாட்சியமளிப்பு

mother-cryஎனது கணவர் இறந்து விட்டதாக இறப்புச் சான்றிதழ் பெறுமாறு வற்புறுத்துகின்றார்கள். அவர் உயிரோடை தான் இருக்கிறார் நான் சான்றிதழை எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என கணவனை காணாது தவிக்கும் ஒருவர் கண்ணீருடன் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

எனது கணவர் புதுக்குடியிருப்பில இருந்தவர். நான் வவுனியாவில் எனது மாமாவோடு இருந்தேன். பின்னர் யுத்தம் முடிந்து வவுனியா முகாமிற்கு வந்தார்.

அங்கிருந்து வைத்தியசாலைக்கு வந்த என் கணவர் கோவிற்குளம் 5ஆம் ஒழுங்கைக்குள் இருக்கும் எங்களது வீட்டிற்கு வந்துவிட்டார். பிறகு அவர் போகவில்லை. 05.05.2009 ஆண்டு ஆமி வந்து பிடிச்சுக் கொண்டுபோய் வைச்சிருந்தார்கள்.

நான் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை செய்தேன். பின்னர் அவரை 07.05 .2009 வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்தினார்கள். என்ன காரணத்திற்காக என்று எனக்கு தெரியாது.

அங்கிருந்து நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் மீண்டும் வழக்கு 19.05 .2009 என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் 12.05.2009 வைத்து வீட்டில் உள்ள நேரம் வெள்ளை வானில் கொண்டு போனவர்கள் எங்களை விடவில்லை 6பேர் வந்தவர்கள் என்னுடன் கதைக்கும் போது தமிழ் கதைச்சவர்கள் கொச்சை தமிழ்.

முன்னர் ஆமி பிடிச்சு போனது 5.6ஆம் திகதி வவுனியா பொலிஸ் வந்து 7ஆம்திகதி பிணையில் விட்டது. நீதிமன்றில் முற்படுத்திய காரணம் தெரியாது 19 பிறகு வழக்கு எண்டார்கள் பிறகு 12 ஆம் திகதி வெள்ளை வானில் வீட்டுக்கு வந்தவர்களால் எனது கணவன் விலங்கிடப்பட்டு கொண்டு சென்றனர். அதற்குப் பின்னர் எதுவும் எனக்கு தெரியாது.

அவ்வாறு வீட்டிற்கு வந்தவர்கள் பொலிஸ் நிலையம் வருமாறும் அங்கேயே கொண்டு செல்வதாகவும் கூறிச் சென்றனர். ஆனால் அங்கு எனது கணவரை கொண்டுவரவில்லை. அன்று என்னிடம் முறைப்பாடும் பெற்றுக் கொள்ளவில்லை. 13.05.2009 அன்றே முறைப்பாட்டினை செய்திருந்தேன்.

சி.ஐ.டி , ரி.ஐ.டி இராணுவம் என எல்லோரும் வீட்டிற்கு வந்து விசாரிக்கிறார்கள். கணவனை பிடிச்சுக் கொண்டு போகும் போது என்னுடைய மூத்த மகன் அப்பாவை விடுங்கோ என்று கதறினான் ஆனால் அவர்கள் விடவில்லை. இதனால் இப்போது எனது மூத்த மகனுக்கு மனநோய்.

அதோட என்னுடைய கணவன் இறந்திட்டார் என்று இறப்பு சான்றிதழ் பெறவும் என்றும் அப்படி என்றால் தான் உதவிகள் கிடைக்கும் கூறி வருகின்றனர் எனக்கு உதவி இல்லாட்டியும் பரவாயில்லை. உயிரோட எங்கேயோ இருக்கின்ற என்கணவன் இறந்து விட்டார் என்று கூறி சான்றிதழ் பெற என்னால் முடியாது.

அத்துடன் நான் காணாமல் போனவர்களை விடுவிக்க கோரி வடக்கில நடாத்துற எல்லா போராட்டத்திலும் கலந்து கொள்வேன். கடந்த முறை ஆர்ப்பாட்டத்திற்கு போய் வந்து பார்க்கும் போது வீட்டில் இருந்த எனது கணவர் காணாமல் போனது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் களவாடப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைக்கு வருமாறு நேற்று தொலைபேசி மூலம் ரி.ஐ.டியினர் தெரிவித்திருந்தனர். இன்று கிளிநொச்சிக்கு வருமாறு அழைத்திருந்தனர். எனினும் சாட்சியப் பதிவை காரணம் காட்டி நின்றுவிட்டேன் நாளைக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags: , ,

Leave a Reply