மகிந்தவின் விளம்பர ரீ சேர்ட்டை அணிய மறுத்த வாசுதேவ

vasudeva_nanayakkaraமகிந்த ராஜபக்ஷ தலைமையில் பேருவளையில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர்களுக்கு அணியக் கொடுத்த மகிந்தவின் உருவம் அச்சிடப்பட்ட ரீ சேர்ட்டை அணிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மறுத்துள்ளார்.

அதனை அணிய மறுத்த அவர், தான் சீருடைகளை அணிய விரும்புவதில்லை எனவும் சீருடைகளை அணிந்ததால் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று வாசுதேவ இதன் போது கூறியுள்ளார்.

அதேவேளை இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவரின் நடத்தை குறித்து மகிந்த அவருக்கு எச்சரித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்தரங்கு நடைபெற்ற போது அதனை கவனிக்காது அமைச்சர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் மகிந்த அவரை கண்டித்துள்ளார்.

அமைச்சர் ஒருவர் பாடசாலை மாணவரை போல் நடந்து கொள்வது பொருத்தமற்றது எனவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply