கொழும்பின் தேவைகள், தெற்கின் தேவைகள், யாழின் தேவைகளாகவோ வடக்கின் தேவைகளாகவோ கொள்ளப்பட முடியாது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற கூட்டுறவு ஆய்வு மகாநாடு 2014 நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தலைவரவர்களே, மதிப்பார்ந்த அதிதிகளே, சங்கத் தலைவர்களே, சங்க அங்கத்தினரே, எனதருமைச் சகோதர சகோதரிகளே!
ஐக்கிய நாடுகளின் சர்வதேச கூட்டுறவுகளின் தினம் ஒவ்வோர் ஆண்டிலும் வரும் ஜூலை மாத முதல் சனிக்கிழமையில் இடம் பெறுகின்றது. எனவேதான் இன்று இங்கு கூடியிருக்கின்றோம். அடுத்த வருடம் ஜூலை மாதம் 4ந் திகதி சனிக்கிழமை இது கொண்டாடப்படும்.
கூட்டுறவு பற்றிய அறிவை மேம்படுத்துவது, சர்வதேச ரீதியாக கூட்டுறவுகளின் அனுகூலமான அண்மித்த உறவுகளைப் பலப்படுத்துவது போன்ற பல விடயங்கள் இத்தினத்தைக் கொண்டாடுவதின் நோக்கமாக இருக்கின்றது. உலகத்தின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்குக் கூட்டுறவுமுறை எந்த விதத்தில் பயனுடையதாக அமையக் கூடும் என்பதை ஆராய்வதே பொதுவாக இந்த நாடுகளின் குறிக்கோள்.
“கூட்டுறவு வியாபார முயற்சிகள் சகலருக்குந் தொடர்ந்திருக்கத் தக்கதான அபிவிருத்தியை ஏற்படுத்தும்” என்பதே உலக ரீதியான இவ் வருடத்தைய கருப்பொருளாகும். எங்களைப் பொறுத்த வரையில் கூட்டுறவு பற்றி ஆய்வு செய்யும் ஒரு தினமாக நாங்கள் இத்தினத்தை ஆக்கியுள்ளோம்.
கூட்டுறவு இயக்கத்தின் மிக முக்கிய குறிக்கோள்களில் ஒன்று சமூகக் கரிசனையாகும். ஆகவே எமது மக்கள் எவ்வாறு தொடர்ந்திருக்கத் தக்க, சார்பான, அனுகூலமான சமூகச் சுற்றாடலைப் பேணிப் பாதுகாத்துவரலாம் என்பது எமது நோக்கங்களில் மிக முக்கியமானதொன்றாக அமைகிறது. இந்த விதத்தில் மக்களுக்குத் தொடர்ந்திருக்கத்தக்க நற்சேவைகளைப் புரியும் ஆற்றலைக் கூட்டுறவு கொண்டுள்ளது என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் கடப்பாடு எங்களைச் சார்கின்றது.
இதனை ஐக்கிய நாடுகள் உணர்ந்துள்ளதால்த்தான் 2001ம் ஆண்டில் அவர்கள் ஏற்றுக்கொண்ட பிரேரணை ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளனர் – “சகல அரசாங்கங்களும் கூட்டுறவு சங்கங்களை நிறுவி அபிவிருத்தி செய்ய வேண்டும். அவையூடாக வறியவர்களையும் வாழ்க்கையில் பாதிப்படைந்திருக்கும் மக்கட்கூட்டத்தினரையும் வலிய வந்து கூட்டுறவுகளை வளர்க்க வழியமைத்துக் கொடுக்க வேண்டும்!
இதன் காரணத்தினால் தொடர்ந்திருக்கத் தக்கதான அபிவிருத்தி இலக்குகளை 2015ம் ஆண்டின் பின் அடைய ஐக்கிய நாடுகள் இப்பொழுதிருந்தே ஆவன செய்து வருகின்றார்கள். கூட்டுறவு இயக்கமானது உலகளாவிய ரீதியில் இலட்சம் கோடி மக்களைத் தன்னகத்தே தற்போது ஈர்த்துக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறக்கக் கூடாது.
கூட்டுறவும் அரசியல் தலையீடுகளும்
வடமாகாணம் ஒரு காலத்தில் கூட்டுறவுக்குப் பெயர் போன ஒரு பிராந்தியமாக அமைந்திருந்தது. அப்பொழுது அரசாங்கங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அநாவசியமாக உள்ளிடாது மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே உரியவாறு நடாத்திச் செல்ல தாங்கள் உதவி புரிய வேண்டும் என்ற கொள்கையில் இருந்தார்கள்.
அண்மைக் காலங்களில் மத்தியின் கட்டுப்பாடு அதன் சகல விதமானதான உள்ளீடுகள் என்பன கூட்டுறவு இயக்கத்தின் சுதந்திரத்தையும் தொழிற் திறனையும் பாதித்துள்ளன. அரசியல் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன. இவை கூட்டுறவை உருவாக்கியவர்களின் குறிக்கோள்களை உதாசீனம் செய்வதாக அமைகின்றன.
கூட்டுறவு என்பது கூட்டான சொந்த உடமை, ஜனநாயக ரீதியான கட்டுப்பாடான தொழில் முயற்சி – இவை ஊடாக ஒரு சுய ஆளுகையுடைய, தன்னார்வமாகத் தமது பொது பொருளாதார, சமூக, கலாசாரத் தேவைகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வதாற்காக ஒன்று சேர்ந்து ஐக்கியப்படுகின்ற ஆட்களின் சங்கமாகும்.
ஆகவே கூட்டுறவின் அடையாளத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றால் அதற்காகப் பின்வரும் அடிப்படைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவையாவன –
1. சுய பொறுப்புணர்வு – இதனால்த்தான் மத்தியின் உள்ளீடுகள் எம்மால் மதிக்கப்பட முடியாமல் இருக்கின்றது. சுயபொறுப்புணர்வு வளர வெளியார் தலையீடுகள் தவிர்க்கப்படுதல் அவசியமாகின்றது.
2. ஜனநாயகம் – இதைப் பேணவேண்டும் என்றால் மக்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டும். மத்தியின் கட்டுப்பாடுகளும் தடைகளும் குறைக்கப்பட வேண்டும்.
3. சமத்துவம் – அரசியல் உள்ளீட்டால் சமத்துவம் இல்லாதாகிவிடும். அற்பர்கள் கூட அதிகாரம் காட்டத் தொடங்கி விடுவார்கள்.
4. ஒப்புரவு – கொடை கொடுக்கும் சிந்தனை, சமாதான எண்ணங்கள், முறைமையில் ஊன்றிப் பயணிக்கும் பாங்கு ஆகிய சகலதும் அரசியல் உள்நுழைவால் பாதிக்கப்படுவன. அடுத்து
5. ஐக்கியம் – அரசியல் உள்ளிட, அதிகாரம் வெளியில் இருந்து வந்து அதிர்ச்சி தர, ஐக்கியமானது அகன்று விடும். இன்று நாங்கள் இதை வெளிப்படையாகவே கூட்டுறவு சங்கங்களில் காண்கின்றோம். அரசியல் செல்வாக்கு நண்பர்களையும் எதிரிகள் ஆக்குகின்றன.
இவற்றை விட பின்வருவனவற்றையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது
1. நேர்மையான அறநெறிமுறை
2. திறந்த வெளிப்பாட்டுத்தன்மை
3. சமூகப் பொறுப்பு
4. பிறரில் கவனஞ் செலுத்துதல்
இப் பேர்ப்பட்ட அடிப்படை மனோ நிலைகளைக் கூட்டுறவாளர்கள் கொண்டிருக்க வேண்டும். ஆகவே கூட்டுறவு என்பது ஒரு கலாசாரம். அதற்கு எதிர் மறையானதே தனிப்பட்ட அதிகார உள்ளீடு. அதிகாரத்தைப் பாவித்துக் கூட்டுறவுகளை அகப்படுத்திக் கொள்ள முனைவோர் கூட்டுறவின் ஆணிவேரையே ஆட்டங்காணச் செய்கின்றனர்.
அங்கத்தினர்களின் தன்னார்வம், திறந்த உறுப்புரிமை, ஜனநாயக உறுப்பினர் கட்டுப்பாடு, உறுப்பினர் பொருளாதாரப் பங்குபற்றுகை, சுய ஆளுகை, சுயாதீனம் மற்றும் கூட்டுறவுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, சமூக அக்கறை போன்ற பலதும் அரசியல் உள்ளீடுகளால் பாதிக்கப்படுகின்றன.
கூட்டுறவும் சமூக விருத்தியும்
கூட்டுறவானது எமது மக்களின் வாழ்க்கைத்தர உயர்ச்சிக்குக் கைகொடுத்து உதவ முன்வர வேண்டும். நாங்கள் எம்முள்ளே சிந்தித்துக் கருமமாற்றி எமக்கான நன்மைகளை நாமே பெற வழி அமைக்க வேண்டும். கடந்த தேர்தல் காலத்தில் மாநில ஆட்சி, சுயாட்சி, தனித்துவம் என்ற பல பதங்கள் பாவிக்கப்பட்டன.
அவற்றின் அர்த்தத்தை அடிப்படையில் பிரதிபலிப்பது கூட்டுறவே. வடமாகாண மக்களுக்குங், கிழக்கு மாகாண மக்களுக்குஞ், சுயாட்சி கிடைக்கின்றதோ இல்லையோ எமது தனித்துவமான பொருளாதார வளர்ச்சிக்கு அனுகூலமாக அமையப் போவது கூட்டுறவே. மத்தியின் தலையீடு முற்றாக வரையறைக்குட்படுத்தப்பட்டதாக அமையும் கூட்டுறவே எமது மக்களின் நல்வாழ்விற்கு வித்திடும்.
எமக்குப் பொருளாதார விருத்தி, வேலைவாய்ப்பு, முறையான வளப்பயன்பாடு, சேமிப்பு, வருமானப் பங்கீடு என்று பலதும் தேவைப்படுகின்றன. இவற்றைப் பெற முதலில் நாங்கள் எங்கள் தேவைகளை அடையாளங்காண வேண்டும். அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களின் தேவைப்பாடுகள், எதிர்பார்ப்புக்கள், மனநிலை போன்ற பலவும் உறுதியாக ஆராயப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட வேண்டும். இதனையே அண்மையில் ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்னர் நான் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் கேட்டிருந்தேன்.
எல்லாவற்றையும் முறையாகச் செய்து தருவதாக வாக்களித்து விட்டு மத்திய அரசாங்க அமைச்சர் ஒருவருடன் எனக்குத் தெரியப் படுத்தாமலே ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார். கேட்டால் ஐக்கிய நாடுகள் மத்தியுடன் தான் உறவு கொண்டாட முடியும் மாகாணத்துடன் அல்ல என்றார். அப்படியானால் எங்கள் அபிலாஷைகளைத், தேவைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் மத்தியுடன் மகிழ்ந்திருந்து மதிப்பீடு செய்யப் போகின்றீர்களோ என்று கேட்டால் “இல்லை இல்லை! உங்களுடனும் கலந்தாலோசிப்போம் என்றார்.
எது எவ்வாறிருப்பினும் எமக்கு எம் மக்களின் நலன் காக்கப்படவேண்டும். எமது தேவைகள், அபிலாஷைகள், தடங்கல்கள், சுற்றுச் சூழற் பாதிப்புக்கள் அனைத்தும் அறிந்து கொள்ளப்பட்ட பின் எமது பொருளாதார விருத்தியை எவ்வாறு உண்டு பண்ணலாம் என்று நாம் சிந்திக்க வேண்டியிருக்கும். எமது மக்களின் வேலை வாய்ப்புக்கு நாங்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டி வரும் என்று சிந்திக்க வேண்டியிருக்கும். எமக்கிருக்கும் வளப் பயன்பாட்டை உச்ச கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நாம் செய்ய வேண்டியவை என்ன என்று நாமே எம்மைக் கேட்க வேண்டியிருக்கும்.
எவ்வாறான சேமிப்பை எம் மக்கள் கடைப்பிடிக்கின்றார்கள், அண்மைக் காலங்களில் அவர்கள் படாடோப நுகர்ச்சியில் கூடிய சிரத்தை காட்டி இருந்ததையும் சிலகால பாவனைகளின் பின் இருந்ததையும் இழந்து துடி துடித்துக் கொண்டிருக்கின்றார்களா என்பவை பற்றியெல்லாம் ஆராய வேண்டியிருக்கும். பணவீக்கம் எப்பேர்ப்பட்ட பாதிப்பை எமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்ப்படுத்தி வருகின்றது என்பது பற்றியும் ஆர அமர சிந்திக்க வேண்டியிருக்கும்.
கொழும்பின் தேவைகள், தெற்கின் தேவைகள், யாழின் தேவைகளாகவோ வடக்கின் தேவைகளாகவோ கொள்ளப்பட முடியாது. உதாரணமாக ஒரு மோட்டார் வண்டியை கொழும்பில் ஒருவர் வாங்கும் போது கொழும்பின் வீதிகள் முழுமை அடைந்திருக்குஞ் சூழலில்த் தான் அவர் தமது வாகனத்தைத் தேர்ந்தெடுக்கின்றார். ஆனால் அதே பாணியில் யாழ் மண்ணிற்குந் தேர்ந்தெடுப்பது சரியென ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
எமது முக்கிய வீதிகள் தவிர்ந்த கிளை வீதிகளில் சில நாற்பது வருடங்களுக்கு மேல் கேட்பார் அற்று பதனிடப் படாமல் கிடக்கின்றன. அவற்றின் மீது செல்லும் வாகனங்கள் நல்ல வலுவடையனவாக இருக்க வேண்டும். நவீன நெருப்புப் பெட்டி வாகனங்களை அவற்றின் மீது பல நாட்களுக்கு ஓட்ட முடியாது போய்விடும். ஆகவே ஒரு வாகனம் வாங்கும் போது கூட சுற்றுச் சூழலை மனதிற்கெடுத்து வாங்க வேண்டும்.
அடுத்து எமது மூல வளங்களை நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப வேலைவாய்ப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். உள்ளூர் மூலவளங்களின் உச்சப் பயன்பாட்டை கருத்திலெடுத்து வேலை வாய்ப்பைத் திட்டமிட்டால் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட முடியும். ஒரு உதாரணத்தைக் கூறுகின்றேன்.
நேற்று நான் விமானத்தில் கொழும்பில் இருந்து வந்த போது ஒரு சட்டத்தரணி அன்பர் என்னுடன் பயணம் செய்தார். வடக்கில் வரட்சி ஏற்பட்டுள்ளது பற்றி எமது சம்பாஷணை திசை திரும்பியது. அப்பொழுது அவர் கூறினார் “சேர்! இடத்திற்குத் தக்கவாறு நாங்கள் எங்கள் பயிர்ச் செய்கைகளை, மர நாட்டல்களை வைத்துக் கொள்ள வேண்டும். எனது கட்சிக்காரர் ஒருவர் மழை இல்லாத அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் தண்ணீர் அதிகம் வேண்டாத முருங்கை மரங்களை நாட்டி முருங்கையில் நல்ல வருமானம் பெற்றுள்ளார்.
அது மட்டுமல்ல. அம்மரங்களில் இருந்து ஒருவித துகளோ தூளோ உருவாக்கி அதை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றார். அத் தூள் மிகவும் விலை மதிப்பு உடையது. நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்கின்றார்” என்று கூறினார். எனவே எமது மூல வளங்களை எமது சூழல்களை நன்கறிந்து அவற்றை எவ்வாறு எமது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு நெறிப்படுத்தலாம், வேலை வாய்ப்புக்களை அவற்றினூடு விரிவு படுத்தலாம் என்பது பற்றி எல்லாம் நாம் ஆராய வேண்டும்.
உண்மையில் உள்ளூர் மூல வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் ஆலோசனைகளைச் சிறந்த முறையில் முன்வைக்க வல்லவர்கள் எமது கூட்டுறவாளர்களே. அவர்கள் பிரதேச வாசிகள் என்ற படியால் எது எங்கு விளைவன, எவை நன்மை பயப்பன, எவ்வாறு அவற்றைப் பராமரிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் பாரம்பரியமாக அவர்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பதால் அவர்கள் இத்தகைய வட மாகாண பொருளாதார விருத்திக்கு வித்திட சாலும் பொருத்தமுடையவர்கள் என்பதை நாம் அடையாளம் காண வேண்டும்.
போரின் பின்னரான சமூக மாற்றங்கள்
அண்மைக் காலங்களில் போரின் பின்னர் பல சமூக சூழல் மாற்றங்கள் எம்மைப் பீடித்துள்ளன. மரபு சார்ந்த கூட்டுக் குடும்ப வாழ்வு குலைந்து போன தனிக் குடும்பங்கள் அதிலும் போரினால் பெற்றவர் ஒருவரை மட்டுங் கொண்ட அல்லது பிள்ளைகள் தனித்து விடப்பட்ட சூழ்நிலை தற்போது எம் மத்தியில் உருவாகியுள்ளது. அது மட்டுமல்ல. வேலை பார்க்கும் பெற்றோர்களால் பிள்ளைகளைச் சரியாகப் பராமரிக்க, கண்காணிக்க, வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் குழந்தை வளர்ப்பை நிறுவன மயப்படுத்தல் முதலான கூட்டுத் தொழில்களை வளர்த்தெடுக்க வேண்டிய சமூகப் பொறுப்பு எம்மைச் சார்கின்றது. கூட்டுறவாளர்கள் அல்லாது இவற்றைப் பொறுப்புடன் உள்ளூரிலே கொண்டு நடத்தக் கூடியவர்கள் வேறு யாராக இருக்க முடியும்? எமது மக்கள் இந்தச் சந்தபர்ப்பங்களைப் பயன்படுத்தா விட்டால் தெற்கில் இருந்து வந்து “போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் அது செய்கின்றோம், இது செய்கின்றோம்” என்று கூறிப் படம் எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் தமக்கெனப் போதிய பணம் சம்பாதித்துக் கொள்வார்கள்.
கூட்டுறவு எமது உள்ளூர் வாழ்க்கையில் சகல மட்டத்திலும் நற்பாதிப்பைத் தரவல்லது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதிலும் அறநெறியை வளர்ப்பதிலும் அதன் பங்கு மிகவும் வேண்டப்படுகிறது எனலாம்.
தற்போதைய சமூக மாற்றங்களும் கூட்டுறவும்
அதே நேரத்தில் இன்றைய கால கட்டத்தில் கூட்டுறவு எந்தளவுக்கு உதவி செய்யக் கூடும் என்பதை அடுத்துப் பார்ப்போம்.
முக்கியமாகப் பல குடும்பங்களில் இருந்த ஆண்கள் போரில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் அல்லது கைது செய்யப்பட்டு அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தோ தெரியாமலோ இருக்கின்றது. பல பெண்கள் தமது வயது போன பெற்றோரையும், தமது குழந்தைகளையும் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய ஒரு நிலையில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அதற்கான வளங்கள் இல்லை.
தொழிற்திறன் இல்லை. தொழில்களைத் தொடங்க தொகைப் பணம் இல்லை. இதனால்த்தான் அவர்களை கிராம அபிவிருத்தி சங்கங்களில் அங்கம் வகிக்குமாறும் பெண்கள் சங்கங்களை நிறுவுமாறும் அரசாங்கமும், அரசாங்க சார்பற்ற நிறுவனங்களும் ஐக்கிய நாடுகள் நிறுவனங்களும் வலியுறுத்தி வந்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் அவர்களுள் சிலருக்கு உதவிகள் அவர்களை நாடி வந்துள்ளன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் கிடைத்தது போதாது இன்னும் வேண்டுமென்பதே எங்கும் எழுந்திருக்கும் குரல். அத்துடன் எதுவும் கிடைக்கவில்லை என்று முறைப்பாடு செய்வோரும் அநேகம். இதனை நான் அண்மையில் வன்னியில் பல பாகங்களிலும் சுற்றுப் பயணம் செய்தபோது கண்டறிந்தேன்.
முன்னர் இருந்த சிக்கனக் கடனுதவி கூட்டுறவுச் சங்கங்கள் தற்போது மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு மக்களுக்கு உரியதான உதவிகளைச் செய்ய இப்பொழுது காலம் கனிந்து வருகின்றது என்று கூறலாம். போருக்கு முன்னர் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இருந்த 528 இப்பேர்ப்பட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களில் தற்போது 259 சங்கங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்து வருவதாக அறிகின்றேன். மற்றவற்றையும் நாம் திரும்ப உயிர்பெற உதவி செய்ய வேண்டும். இந்தத் தரவுகள் இப்பொழுது மாறியிருக்கக் கூடும்.
சுழல் நிதியமானது (Revolving Funds) இந்த சங்கங்களைப் பொறுத்தவரையில் அறிமுகப்படுத்தப்பட்டு கிராம மட்டத்தில் அவை நல்ல வரவேற்பைப் பெற்று வந்துள்ளன. இதனை நாங்கள் தொடர்ந்து எமது மக்களுக்குக் கிடைக்கச் செய்ய ஆவன செய்ய வேண்டும். இருக்கும் நிதியங்களை மிகக் குறைந்த வட்டியில் உறுப்பினர்களுக்குக் கொடுத்தெடுத்துத் திரும்பவுங் கொடுப்பதே இந்த சுழல் நிதியம் ஒழுங்கமைப்பின் உபாயம்.
கடன் கொடுக்கும் போது உள்ள+ர் மக்களே யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதால் பிழையான நபர்களுக்குப் பணம் கொடுப்பது தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிதியங்களைச் சரியாகக் கூட்டுறவு அடிப்படையில் நடத்தி வந்தால் மீண்டும் மீண்டும் அங்கத்தவர்களுக்குப் பண உதவி கிடைக்கும். பணத்தை நிதியங்களிற்குக் கையளிக்கப் பல தாபனங்கள் முன் வருகின்றன.
ஆனால் அவற்றை ஏற்க அரசாங்கம் ஏதும் தடைகள் விதிப்பனவோ என்பதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அண்மைக் காலங்களில்ப் புலிகள் சார்பான நிறுவனங்கள் வடமாகாண மக்களுக்குப் பணம் கொடுப்தை நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும், பணம் எங்கிருந்து வருகின்றன என்பதை வெளிநாட்டு வளங்கள் சார்பான திணைக்களம் ஆராய்ந்து அறிய வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகின்றது.
உண்மையில் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி ஜனாதிபதி அவர்களை நான் அவரின் பல செயலாளர்களுடன் கொழும்பில் சந்தித்த போது வெளிநாட்டில் இருக்கும் எமது தமிழ் மக்கள் எமக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதாவது 1000 இலட்சம் ரூபாய்க்குக் குறைவான தொகைகளை அனுப்பும் போது அவற்றை நேரடியாகப் பெற உதவி செய்ய வேண்டும் என்று கோரினேன்.
அதற்கு அவர் Dr.P.B.ஜயசுந்தர அவர்களின் ஆராய்வுக்குப் பின்னர் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். அதாவது பணத்தின் மூலம் என்ன அது எங்கிருந்து வருகின்றது என்பதைத் தாம் ஆராய வேண்டும் என்றார்.
இதன் தாற்பரியம் என்ன? புலிகள் பணம் கொடுக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பணம் எவ்வாறு இங்கு பாவிக்கப்படப் போகின்றது என்பதுதானே அரசாங்கத்தின் கரிசனையாக இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு அப்பணம் புலிப்பணமா அல்லது சிங்கப்பணமா, கரடிப்பணமா இல்லையா என்று ஆராய முற்படுவது எனக்கு மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பணம் இங்கிருந்து கொண்டு சென்ற அல்லது பிழையான முறையில் சம்பாதித்துப் பெற்று வெளிநாட்டில் பெற்றுக்கொண்ட பணம் என்றால் அதை ஆராய வேண்டும் என்று கூறலாம்.
அதாவது பணச் சலவை (ஆழநெல டுயரனெநசiபெ) சம்பந்தமாகப் பல சட்டங்கள் இருக்கின்றன. அவ்வாறு ஆராய்வதென்றால் அத்தனை நன்கொடைப் பணங்களையும் பற்றி ஆராய்வு செய்ய வேண்டும். அதைவிட்டுப் புலிப்பணம் பற்றி ஆராய வேண்டும் என்று கூறியமை மனமயக்கத்தையே ஏற்படுத்துகின்றது.
ஆகவே பணம் தர எமது புலம்பெயர்ந்த மக்கள் ஆயத்தமாக இருக்கின்றார்கள். நாம் பெற ஆவலாய் உள்ளோம். மத்தியில் நந்தி இருந்து தடுப்பதுதான் தற்போதைய பெரிய பிரச்சனையாக ஆகியுள்ளது.
சுழல் நிதியங்களும் சிக்னக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்களும் பணம் எமக்குக் கிடைப்பதாய் இருந்தால் சுழல்நிதிகளானவை எமது அபிவிருத்திக்கு, மக்களின் அன்றாடத் தேவைகளைச் சமாளிப்பதற்கு, குடும்பங்களைப் பராமரிப்பதற்கு மிக்க உதவியாய் இருப்பன. தனிப்பட்ட மக்களுக்குப் பணத்தைக் கொடுக்காது ஒரு மக்கட் கூட்டத்தினருக்கு அவர்கள் யாவரதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கூட்டுறவு அடிப்படையில் பணக் கொடைகளைக் கொடுப்பது சாலச் சிறந்ததே.
சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்கள் என்பன மக்களின் அடிமட்டத்தில் வேலை செய்து மக்களின் தேவைகள அறியத் தகுந்த தாபனங்கள். அவற்றை நடத்த அரசாங்கம் உரிய அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்து உதவி செய்ய ஆவன செய்து வருகின்றது. எனவே தான் கொடையாளர்கள், கொடை தர மனமுள்ள தாபனங்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள் போன்றவை வன்னியில் முக்கியமாக இந்த சிக்கனக் கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களின் உதவியுடன் மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க உதவலாம் என்று கூறி வைக்கின்றேன்.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறான கிராம மட்டத்திலான சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்களுடன் உறுப்பினர்களாக இணைந்து கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்கும். ஒரு பகுதியில் வசிக்கும் பத்துபேர் சிக்கனத்தையும் சேமிப்பையும் மேம்படுத்தும் முகமாக ஒரு குழுவாகச் சேர்ந்து கொள்ளலாம். அவர்கள் கைவசம் இருக்கும் எவ்வளவு குறைந்த தொகையான சேமிப்பையேனும் அவர்கள் சேர்த்து ஒரு நிதியத்தை அமைக்கலாம்.
அதாவது ஒரு நுண்நிதியத்தை உருவாக்கி குறைந்த வட்டிக்கு அதில் இருந்து உறுப்பினர்களுக்கு சிறிய கடனுதவி அளிப்பதே இதன் நோக்கம். மிக இக்கட்டான நிலையில் வாழும் மக்கள் எவ்வாறு சேமிக்க முடியும் என்று யாராவது கேட்கலாம். அதற்கு பலதடவைகளில் கூறியிருக்கும் பதில் ஒரு கரண்டி சீனி அல்லது ஒரு படி அரிசி நாளாந்தம் எடுத்து வைத்தால் மாத முடிவில் பெரியதொரு அளவு சேர்ந்திருப்பது போல் சிறு துளி பெருவெள்ளம் என்ற கோட்பாட்டை மையமாகக் கொண்டே நுண்நிதியங்கள் நடை முறையில் உள்ளன.
இவர்கள் காலத்திற்குக் காலம் குறிப்பிட்ட தினங்களில் சந்தித்து, தம்முடைய பொதுவான பிரச்சினைகள் பற்றிக் கலந்தாலோசித்து தமது கூட்டங்கள் பற்றி கூட்ட அறிக்கைகளைத் தயாரித்து வைத்து கிடைத்த பணங்கள் பற்றிய சரியான கணக்கு விபரங்களைக் குறித்து வர வேண்டும். இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறும், கடன் கேட்போரின் அவசரத்தைப் பொறுத்தும் கடன் அளிக்கப்படலாம். பணம் எடுப்பவருக்குப் பிணையாளர்களாக உறுப்பினர்களில் இருவர் கையெழுத்திடுவதால் அவர்கள் அந்த நபர் தவறாது பணத்தைக் கட்டப் போதிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று கொள்ள இடமிருக்கின்றது.
இவை சட்ட ரீதியான சங்கங்களாக மாற கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்துடன் பதியப்பட வேண்டும். பதியப்பட முதல் தவறாது அங்கத்தவர்கள் கூடிக் கூட்டங்கள் வைத்தார்களா, சங்கத்தின் பொது நோக்கங்களைக் கடைப்பிடித்தார்களா என்பது பற்றியெல்லாம் ஆராயப்படும். இதற்காகத் தான் கூட்டுறவு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பதிவு பெற்ற பின் ஆதனங்களை சங்கப் பெயரில் வாங்கவும் விற்கவும் உரித்துடையவர்கள் ஆவார்கள் மேற்படி சங்கத்தினர்.
1359 இப்பேர்ப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் எம்மிடையே பதிவு பெற்றுள்ளனர். இந்த கூட்டுறவு சங்கங்களை மையமாக வைத்தே புலம் பெயர் தமிழ் மக்கள் தமது உதவிகளைச் செய்ய முற்பட வேண்டும். அதாவது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய மட்டும் பணம் அனுப்புகின்றோம் என்று அவர்கள் கூறினால் அவ்வாறான ஒரு காரியத்தில் ஈடுபடப் போவதாக இக் கூட்டுறவுச் சங்கங்கள் உறுதி மொழி அளித்து மக்களுக்கு உதவி புரியலாம்.
அவ்வாறு தரப்படும் நிதிகள் கடன் கொடுக்கப்பட்டு, திரும்பப் பெறப்பட்டு மேலும் கடன் கொடுக்கப் பயன்படுவன. அதாவது மேற்படி சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்படும் நிதிகள் மீண்டும் உறுப்பினர்களுக்குக் கொடுத்தெடுக்க உதவுவன. அதனால்த் தான் இவற்றைச் சுழல் நிதியங்கள் என்கின்றார்கள்.
வடக்கு கிழக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிக்கனக் கடனுதவி கூட்டுறவுச்சங்க மாவட்ட இணைப்புச் சங்கங்கள் உண்டு. அவை வெளி நாடுகளில் இருந்து வரும் பாரிய தொகைகளைப் பெற்று உரியதைச் செய்ய அனுபவம் பெற்ற நபர்கள் ஆவர்.
ஆகவே போரினால் பாதிக்கப்பட்ட எம் மக்கள் இணைந்து மேற்குறிப்பிட்டவாறு சிக்கனக் கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி அல்லது முன்னமே நடைமுறையில் இருக்கும் சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகி தமது வாழ்க்கையில் மறுமலர்ச்சியைப் பெற நடவடிக்கைகள் எடுக்கலாம்.
இறுதியாக கூட்டுறவுச் சங்கங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கூறி வைக்கின்றேன்.
1. தன்னார்வமாக எந்த வித பால், மத, மொழி, இன, அரசியல் பாகுபடின்றி கூட்டுச் சேர்வதே கூட்டுறவுச் சங்கங்களின் கொள்கையும் கோட்பாடுமாக இருக்க வேண்டும்.
2. இவை ஜனநாயக முறைப்படி இயங்கும் தாபனங்கள். உறுப்பினர்களால், உறுப்பினர்களுக்காக, உறுப்பினர் சார்பில் நடாத்தப்படுவன இவை. அங்கு சேர்ந்து பேசி முடிவுகள் எடுக்கும் தன்மையே முதல் இடம் வகிக்கின்றது.
3. பொதுவாக கூட்டுறவின் ஆதனங்கள் அங்கத்தவர்களின் கூட்டு ஆதனங்களாகவே இருப்பன. ஆரம்ப மூலதனமானது முதலில் உறுப்பினர் அனைத்துஞ் சேர்ந்து கொடுக்கும் பணத்தையே அஸ்திவாரமாகக் கொண்டிருக்கும்.
4. உறுப்பினர்களாலேயே மேற்படி கூட்டுறவு சங்கங்கள் ஆற்றுப்படுத்தப்படுகின்றன. கூட்டுறவுச் சங்கங்கள் தன்னுரிமை அதிகாரம் கொண்டவை. தம்மைத்தாமே பரிபாலித்து வருபவை. கூட்டுச் சேர்ந்தே உடன்பாடுகளில் ஈடுபடுவர்.
5. வழக்கமாக இவை தமது உறுப்பினர்களுக்குப் போதிய கல்வியும் பயிற்சியும் அளித்து வருகின்றன.
6. உறுப்பினர் சார்பில் செயல்பட்டுக் கொண்டே கூட்டுறவை அரச, சர்வதேச மட்டங்களுக்கு எடுத்துச் செல்ல வல்லவர்கள் அவர்கள்.
7. உறுப்பினர் விருப்பத்திற்கேற்பத் தமது சமூகங்களின் மேம்பாட்டுக்காக உழைப்பவர்களே கூட்டுறவு சங்கத்தினர்.
எனவே கூட்டுறவை நாங்கள் நல்லாட்சியின் அடிப்படையில் இயங்க இடமளிக்க வேண்டும். தமது இலக்கை நோக்கி செயற்படுவதற்கும், அனைவரையும் சமமாகத் தம் சங்கங்களினுள் உள்வாங்கவும், வெளிப்படைத் தலைமையைக் கடைப்பிடிக்கவும் பொறுப்புக் கூறலை ஒரு கொள்கையாக கொண்டொழுகவும், சந்தித்துப் பங்கேற்று பயன் பெறவும் அவை இடமளிக்கப்பட வேண்டும். வெளியாரின் உள்ளீடல்கள் குறைக்கப்பட வேண்டும்.
எமது கூட்கொழும்பின் தேவைகள், தெற்கின் தேவைகள், யாழின் தேவைகளாகவோ வடக்கின் தேவைகளாகவோ கொள்ளப்பட முடியாது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எமது கூட்டுறவுச் சங்கங்களில் இன்று காணப் பெறும் நடைமுறைச் சிக்கல்கள், மற்றும் சட்டச் சிக்கல்கள் போன்றவற்றைக் களைந்து வடமாகாண கூட்டுறவுத் துறையை முன்னர் இருந்தது போல் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக உங்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதே என் முன்னுள்ள கடமையாகும்.
இதில் உங்கள் ஒத்துழைப்பும், புலம்பெயர் எமது மக்களின் ஒத்துழைப்பும், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அரசாங்கத்தின் அனுசரணையும் தேவைப்படுகின்றன.
யாவரதும் ஒத்துழைப்புடன் கூட்டுறவு மூலம் எமது மக்களின் நல்வாழ்க்கையை நோக்கிப் பயணஞ் செய்ய இந்த நன்நாளிலே திட சங்கற்பம் எடுத்துக் கொள்வோமாக.டுறவுச் சங்கங்களில் இன்று காணப் பெறும் நடைமுறைச் சிக்கல்கள், மற்றும் சட்டச் சிக்கல்கள் போன்றவற்றைக் களைந்து வடமாகாண கூட்டுறவுத் துறையை முன்னர் இருந்தது போல் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக உங்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதே என் முன்னுள்ள கடமையாகும்.
இதில் உங்கள் ஒத்துழைப்பும், புலம்பெயர் எமது மக்களின் ஒத்துழைப்பும், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அரசாங்கத்தின் அனுசரணையும் தேவைப்படுகின்றன.
யாவரதும் ஒத்துழைப்புடன் கூட்டுறவு மூலம் எமது மக்களின் நல்வாழ்க்கையை நோக்கிப் பயணஞ் செய்ய இந்த நன்நாளிலே திட சங்கற்பம் எடுத்துக் கொள்வோமாக.