ஒரு ஆணை திருமணம் செய்து ஒரே நேரத்தில் முதலிரவு கொண்டாடிய இரட்டை சகோதரிகள்!(படங்கள்)

DOUBLE OR NOTHINGவாழ்க்கையில் இணை பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரே நபரை திருமணம் செய்துகொண்ட இரட்டை சகோதரிகள் ஒரே படுக்கையில் முதலிரவையும் முடித்துவிட்டனர். திருமணத்துக்கு முன்பு ஆண் நண்பர்களையும் ஷேர் செய்துகொண்டுள்ளதாக பெருமையோடு தெரிவிக்கிறார்கள் இந்த சகோதரிகள்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் மாகாணத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் அன்னா மட்டும் லூசி. இருவருமே உருவத்தில் ஒரே போல இருப்பார்கள். அன்னாவுக்கு கன்னத்தில் சிறு மச்சம் உள்ளது. அதை வைத்துதான் பெரும்பாலானோருக்கு நாம் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியுமாம்.

இருவருமே தாங்கள் வாழ்நாள் முழுவதும், இணைபிரியாமல் இருக்க ஒருவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லட்சியத்துடன் வாழ்ந்து வந்தனர். அதன்படி தங்கள் நாட்டை சேர்ந்த பைமி (31) என்பவர் இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இரு தரப்புக்கும் பிடித்திருந்ததால் சமீபத்தில் சகோதரிகள் இருவரையும் பைமி திருமணம் செய்து கொண்டார்.

சகோதரிகள் இருவரும் ஒரே படுக்கையில் தங்கள் முதலிரவை நடத்தியுள்ளனர். இதை பெண்களுக்கான பத்திரிகையொன்றில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பேட்டியால் ஆஸ்திரேலியாவே ஆடிப்போய் கிடக்கிறது. கண்டன குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.

இதுகுறித்து சகோதரிகள் கூறுகையில், திருமணத்துக்கு முன்பு எங்களுக்கு பாய்ஃபிரண்டுகள் இருந்தனர். அப்போதே ஆட்களை மாற்றிக்கொண்டு நாங்கள் டேட்டிங் செல்வோம். அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. காதலர்கள் போன் செய்தால்கூட குரலை மாற்றிக்கொண்டு பேசுவோம், காதலர்களால் கண்டுபிடிக்க முடியாது.

மச்சம் உள்ளிட்ட சிறு அடையாளங்களை வைத்து எங்களை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக 2 லட்சம் டாலர் செலவில் இருவரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டோம். எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரி ரசனை இருப்பதால், காதலர், கணவர் விஷயத்திலும் எங்கள் டேஸ்ட் ஒத்துப்போய்விட்டது. எனவே நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்.

எங்கள் கணவர் இருவரையும் மிகவும் அன்பாக வைத்துக்கொள்கிறார், இருவரும் ஒரே கணவருடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம், இருவருக்கும் இடையே எவ்வித பேதமும் சர்ச்சையும் இன்றி வாழ்க்கை இனிமையாக செல்கிறது என்று அவர்கள் தங்கள் பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply