பிரபல நடிகைகளின் அந்தரங்கங்களை பற்றி மனம் திறந்த நடிகர்.

actor_shatrugan_sinha_001பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்கா, பிரபல நடிகர்–நடிகைகள் சிலரின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

சத்ருகன் சின்ஹா அளித்த பேட்டியில், கேள்வி: நடிகர் ராஜேஷ் கண்ணாவுடன் உங்கள் அந்த நாள் நினைவுகள்? பதில்: அந்த காலத்து கதாநாயகர்கள் அவரைப் பார்த்து பொறாமைப்பட்டனர். அவர் போகும் வழியெல்லாம் பெண்கள் கூட்டம் அலைமோதும். டிம்பிள் கபாடியா, ‘பாபி’ படத்தில் நடித்து புகழின் உச்சியை பிடித்தவர். ராஜேஷ் கண்ணா அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு முக்கியமானது என்று அவர் உணர வெகுகாலம் பிடித்தது. தனது ரகசியங்கள் வெளியாவதால் தன் பிம்பம் பாதிக்கும் என்று அவர் நினைப்பதில்லை. மேலும், சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு என்றும் சினிமாவில் ஹீரோவாக இருக்கும் பலர் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பதில்லை, காரணம், சினிமா கற்பனையிலேயே அவர்கள் வாழ நினைப்பதுதான் எனவும் தெரிவித்துள்ளார். கேள்வி: நடிகர் அமிதாப்பச்சனைப் பற்றி? பதில்: தன்னம்பிக்கை என்பது அவருடைய மூலதனம், அமிதாப்பச்சன் தயாரிப்பாளர்களை பெரிதும் மதிப்பவர், நேரத்தோடு அவர் படப்பிடிப்பிற்கு வருவதை பார்த்து சக நடிகர்களும் சரியான நேரத்திற்கு வந்துவிடத் தொடங்குவார்கள். ஜெயாபாதுரிரியை திருமணம் செய்த பின்பு இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஜெயாவை பிரிந்துவிடும் யோசனையில் இருந்தபோது ‘‘சில் சிலர்’’ என்ற சினிமா காஷ்மிரீல் உள்ள இயற்கை காட்சிகளோடு அதிக பொருட் செலவில் தயாரானது.

அந்த படத்தின் கதை கிட்டத்தட்ட அவர் வாழ்க்கையோடு இணைந்தது. அப்போது தன்னுடன் நடித்த ரேகாவை திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டிருந்தார். “சில் சிலர் படம் வெற்றிபெற்றால் நான் என் மனைவி ஜெயாவை பிரிந்து, ரேகாவை திருமணம் செய்துகொள்வேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். படம் வெளியானதும், ரசிகர்கள் படத்தைப் பார்த்து கொந்தளிக்க, தியேட்டர் உரிமையாளர்கள் வேதனையடைந்துவிட்டார்கள். தயாரிப்பாளர், அமிதாப்பிடம் உங்கள் காதல் விளையாட்டுக்கு நான்தானா கிடைத்தேன் என்று வசைபாடி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டார். அதனால் ரேகாவை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தை கைவிட்டார்.

சொந்த வாழ்க்கையை, தொழில் வாழ்க்கையோடு இணைக்கக் கூடாது என்பதற்கு அவருக்கு கிடைத்த ஒரு பாடம் இது. கேள்வி: தர்மேந்திரா–ஹேமா திருமணத்தில் தலையிட்டீர்களா? பதில்: நான் இரண்டாவது திருமணம் வேண்டாம் என்றேன், அவர் கேட்கவில்லை. ஹேமாவின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கெல்லாம் ஓடிப்போய் விடுவார். இது உன் தொழில் வாழ்க்கையை பாதிக்கும் என்றேன். பொதுவாக ஒரு நடிகரை பார்க்கும்போது, இப்போது எந்தப் படத்தில் நடிக்கிறீர்கள்? என்று கேட்பார்கள்

ஆனால் தர்மேந்திராவை பார்ப்பவர்கள் இப்போது யாரை காதலித்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்பார்கள். அவர் தன்னுடன் நடிக்கும் எல்லா நடிகைகளையும் காதலிக்க ஆரம்பித்துவிடுவார். பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள். தர்மேந்திரா மனம் திறந்து பேசக்கூடியவர், குழந்தை உள்ளம் அவருக்கு என்று தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply