அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் வேவு பார்த்த நாடுகளில் இலங்கையும் ஒன்று

USA-Flag-and-Eagleஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் வேவு பார்த்த நாடுகளில் இலங்கையும் ஒன்றெனத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், அமெரிக்காவை மையமாகக் கொண்ட http://www.vox.com/ என்ற இணையத்தளத்தில் வெளியான வரைபடமொன்றில் எந்தெந்த நாடுகள் வேவு பார்க்கப்பட்டன என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன.

இந்த இணையத்தளம் பாரம்பரிய ஊடக நிறுவனங்கள் வாயிலாக விடயங்கள் அணுகப்படும் விதத்திற்குள் வீழ்ந்து விடாமல், புதிய தகவல்களுடன் முக்கியமான பின்னணியை விபரிக்கும் நோக்கத்தைக் கொண்டதாக வர்ணிக்கப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமான 2010ஆம் ஆண்டுக்குரிய வரைபடமொன்றை வெளியிட்ட வொக்ஸ் இணையத்தளம், எந்த நாடுகளைச் சேர்ந்த அரசுகளை வேவு பார்க்கும் அதிகாரங்களை அமெரிக்க அரசாங்கம் கொண்டிருந்ததோ, அந்த நாடுகள் அனைத்தினதும் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் முக்கியமான விடயம் யாதெனில், வத்திக்கான் அடங்கலாக ஏறத்தாழ அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வேவுபார்த்துள்ளது என்பதாகும். அடுத்த விடயம், 5-Eyes என்று அறியப்படும் உடன்படிக்கையின் வாயிலாக இணைத்துக் கொள்ளப்பட்ட ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் வேவு பார்க்கப்படவில்லை என்பதாகுமென வொக்ஸ் மீடியா அறிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply