நவநீதம்பிள்ளைக்கு எதிராக இலங்கை அமைச்சர் ஆபாச பேச்சு!

Dissanayake2ஐ.நா.வில் இலங்கையால் நிறைவேற்றப்படும் தீ்ர்மானத்துக்கு ரஷ்யா, சீனா ஆதரவளிக்கும் பட்சத்தில் ஐ.நா. மனித உரிமையின் விசாரணை அறிக்கையை நவநீதம்பிள்ளையின் ஆசன வாயிலில் சொருகிக்கொள்வதனை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என இலங்கை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஆபாசமாக பேசியுள்ளார்.

ஊவா பரணகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பராக் ஒபாமா எங்களுக்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளார்.
எனினும், இலங்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நாட்டிற்குள் எந்தவொரு உதவாக்கரையையும் அனுமதிக்கப் போவதில்லை. நாடாளுமன்றம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

விசாரணைக் குழுவினர் இலங்கைக்கு எதிராக நல்லதொரு அறிக்கையை தயாரிப்பார்கள். இலங்கைக்கு எதிராக இன்ன இன்னது செய்ய வேண்டுமெனத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஏனைய நிறுவனங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானங்கள் பாதுகாப்பு சபைக்கும் சமர்ப்பிக்கப்படும்.

பாதுகாப்புச் சபையில் சீனாவும், ரஷ்யாவும் அங்கம் வகிக்கின்றன. ரஷ்யாவும் சீனாவும் எமக்கு ஆதரவளிக்கும் என கருதுகின்றேன். இதனால் தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யா அல்லது சீனா வாக்களிக்கும். அவ்வாறு வாக்களித்தால் விசாரணை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆசன வாயிலில் சொருகிக்கொள்வதனை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது” என்று மக்கள் முன்னிலையில் அமைச்சர் ஆபாசமாக பேசியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply