ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சுமார் 200 க்கும் அதிகமா எண்ணெய் டாங்கர் லொறிகளை தலிபான்கள் குண்டு வைத்து வெடிக்கவைத்து தீயிட்டு எரித்தனர். இந்த தாக்குதலினால் தங்கள் டாங்கர் லொரிகளை இழந்த அதன் உரிமையாளர்கள் நட்ட ஈடு கேட்க ஆரம்பித்துவிட்டனர். காபூலின் புறநகர் பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், இந்த டேங்கர்களில் நிரப்பப்படும் எரிபொருள், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகளுக்கு விநியோகம் செய்யவுள்ளதாக தெரிய வந்ததால் அவற்றை தீயிட்டு எரித்து நாசப்படுத்தியதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் இடம்பெற்றபோது இதன் சாரதிகளும் ஏனைய சாரதிகளுமாக ஏறத்தாழ பலநூறு சாரதிகள் தங்கள் சொத்துக்களை காப்பாற்ற முடியாது நின்றுள்ளனர். இந்த டாங்கர் லொறிகளை எரித்ததனால் ஏற்பட்ட கரும்புகை வானளாவ பரம்பியமையும் குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் இராணுவ சீருடையில் வந்திருந்ததாகவும் வந்தவுடன் அவர்கள் சாரதிகளை நோக்கி துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது அதன் பின்னரே தலிபான்கள் இந்த வெடிகுண்டு தாக்குதலுடன் தீவைத்து எரித்துள்ளனர்.
கடந்த வெள்ளியன்று இரவு ஆரம்பித்த இந்த தீ மறுநாள் காலை சனிக்கிழமை வரை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்தில் எரிக்கப்பட்ட வாகனங்களுக்கான நட்ட ஈட்டினை தருவதில் தாமதம் உள்ளதாகவும் குறித்த வாகனங்களின் உரிமையாளர்களும் சாரதிகளும் காபூல் – கந்தகார் தெற்கு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்
















