சமீபத்தில் சென்னையில் நடந்த விஜய் விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் புதிய டிரைலர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த டீசரை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் பார்த்து மகிழ்ச்சி அடைந்த அதே வேளையில் இதே மாதிரியான ஒரு வீடியோவை ஏதோ ஒரு விளம்பரத்தில் பார்த்த மாதிரி இருந்ததாக பலர் பேசிக்கொண்டனர்.
பின்னர் இணையதளங்களில் வந்த செய்திகளின்படி அந்த விளம்பம் நிஜாம் பாக்கு விளம்பரம் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே உத்தம வில்லன் படத்தின் முதல் போஸ்டர் வெளியானபோது இது ஒரு அப்பட்டமான காப்பி என்ற அப்போதே செய்தி இணையதளங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் வெளியான கத்தி திரைப்படத்தின் டீஸரும் ஒரு ஆங்கில நாளிதழின் விளம்பரம் என்று சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றப்பட்டது. இந்நிலையில் நிஜாம் பாக்கு விளம்பத்தை காப்பியடித்து ‘உத்தம வில்லன்’ விளம்பரம் தயாரிக்கப்பட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்து ஃபேஸ்புக், டுவிட்டரில் படுகாமெடியாக கமெண்ட்டும் வந்துக்கொண்டுள்ளது.
நம்ம ஊர் திரைப்பட அறிவுஜீவிகள் கதையைத்தான் காப்பியடித்து படம் எடுக்கின்றார்கள் என்றால் டிரைலரையும் காப்பியடிக்கின்றார்களே என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
















