ப்ரீத்தி ஜிந்தாவுக்கு தீபிகா படுகோனே ஆதரவு. முக்கிய நடிகர்களுக்கு கண்டனம்.

deepika-pretizintaகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் மீது பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியபோது அவருக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குரல் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு பொய்த்தது. முக்கிய பாலிவுட் நட்சத்திரங்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்காததால் ப்ரீத்தி ஜிந்தா கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக விளங்கும் தீபிகா படுகோனே வெளிப்படையாக ப்ரீத்தி ஜிந்தாவுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்தூள்ளார். ஒரு நடிகைக்கு ஏற்பட்ட பாதிப்பு என்று இந்த பிரச்சனையை கருதாமல் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து குரல் கொடுப்பது இன்னொரு பெண்ணுக்குரிய கடமையாகவே தான் கருதுவதாகவும், ப்ரீத்தி ஜிந்தாவின் துணிச்சலான முடிவுக்கு என்றும் தனது ஆதரவு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ப்ரீத்தி ஜிந்தா எப்பொழுதுமே வெளிப்படையாக உண்மையை மட்டுமே பேசுபவர் என்பது இண்டஸ்ட்ரியில் உள்ள அனைவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் அவருக்கு ஆதரவு குரல் கொடுக்காமல் பாலிவுட்நட்சத்திரங்கள் மெளனம் காப்பது ஏன் என்று தனக்கு புரியவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார். ப்ரீத்தி ஜிந்தா எப்பொழுதுமே நேர் வழியில் மட்டுமே செல்லக்கூடியவர் என்பதில் தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக தீபிகா மேலு கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply